Jailer OTT release: ஜவானுக்கு டிக்கெட் கிடைக்கலையா.. ஓடிடியில் ஜெயிலர் ரிலீஸ் ஆகியிருக்கு பாருங்க!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ஜாக்கி ஷராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் படமாக மாறி உள்ளது.

Jailer released on Amazon Prime OTT today

உலகம் முழுவதும் இன்னும் ஏகப்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நான்கே வாரத்தில் ஓடிடிக்கு வந்து விட்டது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கினாலும், ஓடிடி ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

அமேசான் பிரைமில் ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் வீடியோவை நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

Jailer released on Amazon Prime OTT today

ஜவான் படத்துக்கு போட்டி: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில் அந்தப் படத்திற்கு சரியான டஃப் கொடுக்கும் விதமாக ஓடிடியில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியிலும் சாதனை: அதிகாலை முதலில் அமேசான் பிரைமில் ஜெயிலர் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 600 கோடி வசூல் செய்த நிலையில், ஓடிடியிலும் அதிக இம்ப்ரஷனை அள்ளி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு லாபத்தில் இருந்து செக் மற்றும் சொகுசு கார்களை பரிசாக வழங்கியிருந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jailer released on Amazon Prime OTT today

ஷாருக்கானும் கொடுப்பாரா: இன்று வெளியாகும் ஜவான் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினால் அந்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு நடிகர் ஷாருக்கான் பெரிய தொகையை பரிசாக வழங்குவாரா என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் சில வாரங்களில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X