For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன பெரிய ஸ்குயிட் கேம்.. ஜல்லிக்கட்டு தெரியுமா? தில்லுக்கு துட்டு.. நாங்களாம் அப்பவே அப்படி!

  |

  சென்னை: கரணம் தப்பினால் மரணம் என்பது போல சரியாக கேம் விளையாடவில்லை என்றால் உயிர் போய்விடும் என்கிற ஸ்குயிட் கேம் வெப் தொடர் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள அந்த கொரிய வெப் தொடர் கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் அள்ளி உள்ளது.

  இந்நிலையில் ஸ்குயிட் கேம் விளையாட்டுக்கு எல்லாம் முன்னோடியாக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் தமிழ் மண்ணில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்து வரும் நிலையில், இரண்டையும் சும்மா ஒரு ஜாலியாக கம்பேர் செய்து பார்ப்போமா?

  தாமரையை மாற்றி பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு நீங்க டபுள் கேம் ஆடுறீங்களே சிபி தாமரையை மாற்றி பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு நீங்க டபுள் கேம் ஆடுறீங்களே சிபி

  ஸ்குயிட் கேம்

  ஸ்குயிட் கேம்

  நெட்பிளிக்ஸில் வெளியாகி சர்வதேச ரசிகர்களை கவர்ந்துள்ள வெப் தொடர் ஸ்குயிட் கேம் கொரிய நாட்டில் சிறுவர்கள் விளையாடும் ஸ்குயிட் கேம் எனும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. நம்ம ஊரிலும் பள்ளிகளில் மாணவர்கள் நாடு பிடித்தல் எனும் விளையாட்டை சிறு வயதில் விளையாடி இருப்பார்கள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவுட் ஆகாமல் கடக்க வேண்டும். ஒருவேளை அவுட் ஆகிவிட்டால் அவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

  ஒரேயடியாக எலிமினேட்

  ஒரேயடியாக எலிமினேட்

  எலிமினேட் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்வது போல கேமை விட்டு எலிமினேட் இல்லை. ஒரேயடியாக உலகத்தை விட்டே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனாலும், பணம் பத்தும் செய்யும் என்கிற பழமொழிக்கேற்ப பணத்தை பார்த்த பின்னர் மரணம் பற்றிய பயத்தை தாண்டி ஸ்குயிட் கேமில் போட்டியாளர்கள் விளையாடியது தான் உலகளவில் அந்த வெப் தொடர் ஹிட் ஆக காரணம். சதுரங்க வேட்டை படத்தில் நட்டி நட்ராஜ் சொல்வது போல ஒருத்தனை ஏமாத்தணும்னா அவனோட ஆசையைத் தூண்டணும் அப்படி கோடிக்கணக்கான பணத்தை காட்டியே போட்டியாளர்களை விளையாட வைப்பார்கள்.

  சல்லிக்கட்டு

  சல்லிக்கட்டு

  தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான சல்லிக்கட்டு இன்றளவும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு ஊர்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. சல்லிக்கட்டு எனும் பெயரிலேயே சல்லிக் காசுகளை முடிந்த பணமுடிப்பு என்கிற பொருள் உடன் உள்ள விளையாட்டு ஸ்குயிட் கேமுக்கெல்லாம் பிக் பாஸ் என்றே சொல்லலாம். பல முறை வீரமாக மாடுகளை சந்தித்து திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு கார் உள்ளிட்ட பெரிய பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

  கரணம் தப்பினால் மரணம்

  கரணம் தப்பினால் மரணம்

  வீரத்தை வெளிக்காட்டும் இந்த விளையாட்டை சரியாக விளையாட வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்கிற அதே ஸ்குயிட் கேம் நிலைப்பாட்டினை சல்லிக்கட்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து உரைத்திருக்கிறது. ஆனால், ஸ்குயிட் கேம் போல இது கொலைகார ஆட்டம் இல்லை. தமிழர்களின் வீரத்தின் வெளிப்பாடை உலகிற்கு உணர்த்துவது. ஆனால், சில உயிரிழப்புகள் எப்போதாவது அரங்கேறுவதால் சல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த தடைகளை உடைக்க மெரினா புரட்சி எல்லாம் நடந்து நம்முடைய வீர விளையாட்டு மீண்டும் விளையாடப்பட்டு வருகிறது.

  விளையாட வேண்டும்

  விளையாட வேண்டும்

  ஸ்குயிட் கேம் விளையாட்டை உருவாக்கிய அந்த ஒன்றாம் நம்பர் தாத்தா முதல் நபராக அந்த விளையாட்டில் பங்கேற்று இருப்பார். கடைசி நம்பரான 456 நம்பரில் விளையாடி வெற்றிப்பெற்ற ஹீரோ ஏன் நீங்களும் விளையாட்டில் கலந்து கொண்டீர்கள் எனக் கேட்க விளையாட வேண்டும்.. வேடிக்கை பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு என சொல்லும் அந்த வசனமும் சல்லிக்கட்டு விளையாட்டு உலகுக்கு சொல்லிக் கொடுத்த பாடமாகவே பார்க்கப்படுகிறது.

  Squid Game (2021) Web Series Review in Tamil by Poster Pakiri | Filmibeat Tamil
  ரீல் vs ரியல்

  ரீல் vs ரியல்

  ஸ்குயிட் கேம் வெப் தொடர் ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு காலம் காலமாக வீரத் தமிழர்கள் விளையாடும் ரியல் விளையாட்டு. ரீல் விளையாட்டான ஸ்குயிட் கேமை பார்த்தே சர்வதேச ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர் என்றால் ரியல் கேமான ஜல்லிக்கட்டைப் பார்த்தால் எப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு பாருங்க!

  English summary
  Our Jallikattu game might be the fore frontier for the Netflix webseries Squid Game in certain structures and concept of the game.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X