கூட்டு பலாத்காரம்.. போலி என்கவுன்டர்.. அரசியல் த்ரில்லர்.. ஜன கண மன ஓடிடி ரிலீஸ் தேதி!
சென்னை: பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள ஜன கண மன படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
குயின் புகழ் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில்,பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஜி.எம்.சுந்தர், ஸ்ரீதிவ்யா, சாதனா, ஷம்மி திலகன், இளவரசு, கிட்டி, மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஜன கண மன.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவற்பை பெற்றது.

ஜன கண மன
நீதிமன்றம், நீதிமன்றத்தின் வாதம் படத்தின் காட்சியை விறுவிறுப்பாக்கி அனைவரையும் இருக்கையின் நுனியில் அமரவைத்த திரைப்படம் தான் ஜன கண மன. இத்திரைப்படத்தில், பேராசிரியர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரிந்து கொன்று விடுகிறார்.

சுவாரசியமான படம்
அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சாராமுடு, தீவிரமாக விசாரணை நடத்தி, கூட்டு பலாத்காரம் செய்த நால்வரை கைது என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் சுராஜ். இதனால் பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் அவரை ரியல் ஹீரோ என பாராட்டுகின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?
ஆனால், எதிர்தரப்பு வழக்கறிஞராக பிரித்விராஜ், பேராசிரியர் மரணத்தில் உள்ள மர்மத்தையும் போலீஸ் அதிகாரி நடத்திய என்கவுன்டர் திட்டமிடப்பட்ட ஒன்று என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்களையும் கூறுகிறார். அப்படியானால் உண்மையில் நடந்தது என்ன? என்பது தான் இப்படத்தின் கதை. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது.

ஓடிடியில்
இப்படம் வெளியான போது, இங்கே ரூபாய் நோட்டு தடை செய்யப்படும், தேவைப்பட்டால் வாக்கும் தடை செய்யப்படும். யாரும் எதையும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அது இந்தியா என்று பிருத்விராஜ் ஒரு ஊழல் அரசியல்வாதியிடம் பேசிய வசனம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வித்தியாசமான கதை களத்தை கொண்ட ஜன கண மன திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் இல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











