ஓடிடியில் திடீரென டிரெண்டான ’பகவந்த் கேசரி’.. ஜன நாயகன் தான் காரணமா.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

சென்னை: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிகபட்சமாக 114 கோடி ரூபாய் வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் பெற்றார். விஜய்யின் ஜன நாயகன் படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி ரீமேக் தான் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன.

Jana Nayagan is a remake of Bhagavanth Kesari rumours trending Balakrishna movie on OTT

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் மூன்றாவது சிங்கிள் வெளியான நிலையில், கண்டிப்பாக அந்த படத்தை தான் ரீமேக் செய்துள்ளனர் என சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அ. வினோத் பேசும்போது கூட, இந்த படம் பகவந்த் கேசரி ரீமேக் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லவில்லை என்றும் இது தளபதி படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று மட்டுமே சொன்னார் என அவரது பேச்சையும் டிகோட் செய்து வருகின்றனர்.

ஜன நாயகன் டிரைலர் எப்போ?: புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை ஜன நாயகன் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸின் தி ராஜாசாப் டிரைலர் நேற்று வெளியான நிலையில், ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிரைலர் வெளியானால், 100 சதவீதம் ஜன நாயகன் பகவந்த் கேசரி ரீமேக்கா இல்லையா? என்பது தெரிந்து விடும்.

Jana Nayagan is a remake of Bhagavanth Kesari rumours trending Balakrishna movie on OTT

பகவந்த் கேசரி கதை என்ன?: முரட்டு போலீஸ் அதிகாரியாக எதிரிகளை வதம் செய்யும் வனராஜாவாக இருக்கும் பகவந்த் கேசரியை (பாலகிருஷ்ணா) வில்லன் ராகுல் சங்வி (அர்ஜுன் ராம்பால்) தனது தந்தையின் மரணத்துக்காக செய்யாத குற்றத்துக்காக சிறை தண்டனை கைதியாக மாற்றுகிறார். போலீஸ் அதிகாரியான சரத்குமார் கார் விபத்தில் உயிரிழக்க அவரது மகளை தனது மகள் போல வளர்க்கிறார்.

சரத்குமார் விரும்பியதை போல அந்த பெண் குழந்தையை ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கிறார். ஆனால், ஸ்ரீலீலா பாலகிருஷ்ணாவை ஏமாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீலீலாவை அர்ஜுன் ராம்பால் கொல்ல முயற்சி செய்ய, வில்லனை பகவந்த் கேசரி என்ன செய்தார், ஸ்ரீலீலாவுக்கு வீரம் வந்ததா? இல்லையா? என்பது தான் பகவந்த் கேசரி படத்தின் கதை.

அமேசான் பிரைமில் டிரெண்டிங்: பகவந்த் கேசரி ரீமேக் தான் ஜன நாயகன் என ஏகப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்க தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைமில் இருக்கும் பகவந்த் கேசரி படத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து திடீரென ஓடிடியில் அந்த படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய்க்கு செட்டாகுமா?: கில்லி, போக்கிரி, பிரண்ட்ஸ், நண்பன், காவலன், பத்ரி, காதலுக்கு மரியாதை, யூத், வசீகரா என ஏகப்பட்ட் ரீமேக் படங்களில் விஜய் நடித்துள்ளார். லியோ படம் கூட ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் தழுவல் தான். பகவந்த் கேசரி படத்தில் பெண்களை கவரும் விஷயமும் பக்காவான பாலய்யா ஸ்டைல் ஆக்‌ஷன் காட்சிகளும் அதிகம் நிறைந்திருக்கும் நிலையில், தளபதி விஜய் அந்த படத்தை ரீமேக் செய்திருந்தால் கூட இன்னொரு கில்லியாகவோ, போக்கிரியாகவோ படத்தை ஹிட் ஆக்கிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X