Jana Nayagan OTT: ஜனநாயகன் ஓடிடி டீலை கைவிடும் அமேசான் பிரைம்?.. லேட்டாகும் சென்சார்.. சோலி முடிஞ்சு
சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், படத்தை நம்பி 500 கோடி முதலீடு போட்ட கேவிஎன் நிறுவனத்துக்கும் பட்டை நாமம் தான் என தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே ஜன நாயகன் திரைப்படம் திட்டமிட்டப்படி ஜனவரி 9ம் தேதி வெளியாகாமல் போன நிலையில், ஜன நாயகன் படத்துக்கு எதிராக அமேசான் பிரைம் நிறுவனம் வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது ஜன நாயகன் படத்தின் ஓடிடி டீலையே அமேசான் பிரைம் நிறுவனம் கைவிடுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.
தணிக்கை வாரியத்தை பகைத்துக் கொண்டால்: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை போல எவ்வளவு கட் வேண்டுமானாலும் கொடுங்க என அமைதியாக சென்சார் வாரியத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஜன நாயகன் படமே ரிலீஸ் ஆகியிருக்கும் என சிலர் கூறினர். அதன் காரணமாக வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு அமைதியான முறையில் படத்தின் சென்சாருக்கு காத்திருந்தாலும், மறு தணிக்கையில் படத்தை பார்ப்பவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு என தொடர்ந்து படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வருகின்றனர்.
120 கோடி ஓடிடி டீல்: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்த ஜன நாயகன் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடிக்கு அதிகப்படியாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த ஓடிடி டீலை கைவிட முடிவு செய்துவிட்டதாகவும் இன்னமும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், படக்குழு தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் தங்களுக்கு ஜன நாயகன் படமே தேவையில்லை என்றும் அமேசான் பிரைம் நிறுவனம் அதிரடியாக முடிவு செய்து ஜன நாயகன் படக்குழுவுக்கு செக் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுதொடர்பாக அமேசான் பிரைம் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் நஷ்டம்: ஜன நாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில், அனைத்து தரப்பில் இருந்தும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மார்ச் மாதத்திலாவது ஜன நாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்றும் மே மாதம் அல்லது ஜூலை மாதம் தான் ஜன நாயகன் வெளியாகும் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











