Jana Nayagan OTT: ஜன நாயகன் ஓடிடி பிசினஸ்.. பெத்த தொகைக்கு வாங்கிய அமேசான் பிரைம்!

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகாமல் நின்று போனது.

அமேசான் பிரைம் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கி பிப்ரவரி மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

Jana Nayagan OTT deals platform and release date buzz details are here
Photo Credit:

அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நாசர், நரேன், பிரியாமணி மற்றும் சுனில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

ஜன நாயகனை வாங்கிய அமேசான் பிரைம்: ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி படம் பகவந்த் கேசரி தான் என பல மாதங்களாக பரவி வந்த தகவல்களை உண்மையாக்கிய நிலையில், ஓடிடி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து டாப் டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அமேசான் பிரைம் தான் விஜய்யின் ஜன நாயகன் படத்தையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெத்த தொகை: தெலுங்கு படத்தை ரீமேக் செய்து பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் தளபதி வெற்றிக் கொண்டான் (தவெக) ஆக நடித்துள்ள ஜன நாயகன் படத்தை சுமார் 110 கோடிக்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் 8 வாரம் எல்லாம் இல்லாமல் 4 வாரத்துக்குள்ளே ஓடிடியில் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஜன நாயகன் ஓடிடி ரிலீஸ்: ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், பிப்ரவரி 6ம் தேதி அதன் ஓடிடி ரிலீஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டதும் தற்போது தள்ளிப் போயிருக்கிறது. ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் ஜன நாயகன் வெளியாகும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X