Siren OTT: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷின் செம படம்.. சைரன் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான சைரன் திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தற்போது தாமதம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை தொடர்ந்து ஓடிடியில் வெளியிட்டு வருகிறது. பார்க்கிங், லவ்வர் படங்களை தொடர்ந்து ஹனுமான் தமிழ் டப்பிங் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Jayam Ravi Keerthy Suresh s Siren OTT release date postponed

நாளை ஏப்ரல் 11ம் தேதி பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் நிகழ உள்ள நிலையில், சைரன் 108 படத்தின் ஓடிடி ரிலீஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உஷாராக தள்ளி வைத்து விட்டது.

ஜெயம் ரவி படம்: அறிமுக இயக்குநர்களை ஜெயம் ரவியை போல சமீப காலமாக வேறு எந்த நடிகர்களும் நம்புவது கிடையாது. தொடர்ந்து பல அறிமுக இயக்குநர்களை நம்பி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில், சில படங்கள் அவருக்கு கைகொடுக்கின்றன. சில படங்கள் சொதப்பி விடுகின்றன. ஆனால், தொடர்ந்து அறிமுக இயக்குநர்களை வளர்த்து வருகிறார். பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு சோலோவாக ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் எல்லாம் சொதப்பி வருகின்றன. அகிலன், இறைவன் என கடந்த ஆண்டு ரசிகர்களை சோதித்த ஜெயம் ரவி இந்த ஆண்டு சைரன் படத்தை வெளியிட்டுள்ளார்.

சைரன் கதை: தனது மனைவி ஜெனிஃபரை (அனுபமா பரமேஸ்வரன்) திலக வர்மன் (ஜெயம் ரவி) கொலை செய்து விட்டதாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வாழ்க்கையில் புயலை கிளப்பி அவரை ஆயுள் தண்டனை கைதியாகவும் மாற்றி விடுகின்றனர். தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளாமல் தங்கள் குடும்பத்தை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை பரோலில் வரும் ஜெயம் ரவி எப்படி பழி வாங்குகிறார். போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ் அதை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

சைரன் பட்ஜெட்: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனம் தான் சைரன் 108 படத்தை தயாரித்துள்ளது. ஆனால், படம் 15 கோடி வசூலுக்கு மேல் ஈட்டவில்லை என அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் தான் படத்தை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது சைரன் திரைப்படம்.

சைரன் ஓடிடி: ஏப்ரல் 11ம் தேதி சைரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சைரன் 108 திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி சரியாக 2 மாதங்கள் கழித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக போவதாக கூறுகின்றனர். இந்த வாரம் ரசிகர்கள் பிரேமலு படத்தை என்ஜாய் பண்ணட்டும். அடுத்த வாரம் சைரன் படத்தை பார்க்கட்டும் என டிஸ்னி ஹாட்ஸ்டார் முடிவு செய்திருக்கிறது. அப்படியே அந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையும் வெளியிட்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X