Brother OTT: ஜெயம் ரவிக்கு இந்த நிலைமையா? சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான பிரதர்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான பிரதர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. குடும்ப கதை அம்சத்தை கொண்ட இப்படத்தில் சீதா, சரண்யா பொன்வண்ணன்,பூமிகா, நட்டி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வன் என்கிற ரோலில், ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வசூலை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான இறைவன், சைரன் ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த ஜெயம் ரவி, பிரதர் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால், இந்தப்படமும் தோல்வி அடைந்துவிட்டது.

jayam ravi brother

படத்தின் கதை: பிரதர் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தில், வீட்டில் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஜெயம் ரவி, வழக்கறிஞர் படிப்பை முடிக்காவிட்டாலும் எதற்கெடுத்தாலும் 'லா பாயின்ட்' பேசும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வசூலை பெறவில்லை: வீட்டுக்கு அடங்காமல் இவர் செய்யும் செயலால் குடும்பத்திற்குள் பிரச்சனை வருகிறது. இங்கு இருந்தால், மேலும் பிரச்சனை வரும் என்பதால், ஊட்டியில் இருக்கும் அக்கா பூமிகா வீட்டிற்கு ஜெயம் ரவியை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைக்கின்றனர். அக்கா வீட்டிற்கு வரும், ஜெயம் ரவி, அங்கும் சும்மா இல்லாமல் தனது சேட்டையை காட்டிவிடுகிறார்.இதனால், அக்கா குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு, அக்கா கணவரை விட்டு பிரிய நேரிடுகிறது. அதன் பின் அக்கா கணவரோடு சேர்ந்தாரா? ஜெயம் ரவி திருந்தினாரா என்பது தான் படத்தின் கதை.

ஓடிடி தளத்தில்: பிரதர் படம் ராஜேஷின் படம் என்பதால், இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றதால், பிரதர் படம் எடுபடாமல் போனது. ஒருவேளை பிரதர் படம் வேறு ஒரு தேதியில் வெளியாகி இருந்தால், ஓரளவிற்காவது பேசப்பட்டு இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதர் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ள, குடும்ப கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனவர்கள் பார்த்து மக்காமிஷி பாடலுக்கு பார்த்து ஆட்டம் போடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X