Jigarthanda Double X: நெட்பிளிக்ஸில் சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் X... OTT ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் மாஸ் காட்டி வருகிறது.

ஓடிடியில் சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் X
ராகவா லாரன்ஸ், SJ சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனுடன் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மட்டுமே தீபாவளி ரேஸில் மாஸ் காட்டியது.
1975ல் நடக்கும் பீரியட் ஜானர் படமாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சினிமாவின் வலிமை என்ன என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. சினிமாவின் பவர், பழங்குடியின மக்களுக்கு எதிரான அரசியல், காடுகள் அழிப்பு, யானை தந்தம் கடத்தல் என பவர்ஃபுல் மெசேஜ் உடன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா முதல் பாகத்தின் ப்ரீக்வெல் படமாகவும் டபுள் எக்ஸ் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் வெரைட்டியாக நடித்திருந்தனர். இவர்களுடன் நிமிஷா சஜயன், இளவரசு, ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தனர். கதை, திரைக்கதை, மேக்கிங், சந்தோஷ் நாராயணனின் இசை, திருவின் ஒளிப்பதிவு என அனைத்துமே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நச்சுன்னு ஒர்க்அவுட் ஆகியிருந்தது. இதனால் பாசிட்டிவான விமர்சனங்களுடன் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ், சன் டைரக்ட் என இரண்டு தளங்களில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அதேநேரம் இந்தப் படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான பின்னரும் கூட, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு சர்வதேச அளவில் கவனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











