Jigarthanda Double X: ஓடிடியில் வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... கன்ஃபார்மான ரிலீஸ் தேதி!

சென்னை: கார்த்தி சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.

ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jigarthanda Double X: Jigarthanda Double X will be streaming from Dec 8 on Netflix

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கடந்த மாதம் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது.

கேங்ஸ்டர் ஜானரை பின்னணியாக வைத்து 1975ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகியிருந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அதேபோல், பழங்குடியின மக்களின் வாழ்வியல், யானைகளின் பாதுகாப்பு குறித்தும் பேசியிருந்தது. கார்த்தி சுப்புராஜ் இயக்கிய படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தரமான சம்பவம் என ரசிகர்களும் சர்டிபிகேட் கொடுத்திருந்தனர். இதனால் இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்தது.

அதனால் இந்தப் படம் திரையரங்குகளில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதேநேரம் திரையரங்குகளில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் டிசம்பர் 8ம் தேதி ரிலீஸாகிறது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்காக ஓடிடி ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஓடிடியில் வெளியான பிறகு சர்வதேச அளவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கவனம் ஈர்க்கும் என சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X