Black OTT: வேட்டையனோடு முட்டி மோதிய பிளாக்.. ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிடுச்சு.. விவரம்
சென்னை: நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் பிளாக். பாலசுப்ரமணி இயக்கத்தில் இப்படம் வெளியானது. இப்படம் ஹோகரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். படத்தில் தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படம் இன்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படத்தின் காட்சிகளும் திரையரங்கின் காட்சிகளும் ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தில் இருந்த எண்ணிக்கையை விட ஒருவார காலத்தில் அதிகரிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், படம் பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது கருத்தினைத் தெரிவித்தனர். படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கி இருந்தாலும், முதல் வாரத்திலேயே படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமானது. இதனால் படக்குழு வெற்றி விழாவினை சென்னையில் கொண்டாடினர்.

பிளாக் படம் முதல் வாரத்தை விடவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் அதிக தியேட்டர்களில் படம் ஓடியது. குறிப்பாக சென்னையில் மட்டும் ரிலீஸ் தினத்தினை விடவும் இரண்டாவது வாரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 100 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் நாடு முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் நாடு முழுவதுமே படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது. மேலும் தீபாவளி வரை பல தியேட்டர்கள் பிளாக் படத்தின் காட்சிகளைக் குறைக்கவில்லை.
தியேட்டர்கள்: ஏற்கனவே கூறியதைப்போல் சென்னையில் நடைபெற்ற பிளாக் படத்தின் வெற்றி விழாவில், நடிகர் ஜீவா பேசும்போது, "பிளாக் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருந்தாலும் இப்போது ரிலீஸ் செய்யப்பட்ட அளவிலான தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும். எங்களது மிகவும் சிறிய பட்ஜெட் படம். எனவே, நாங்கள், அந்த அளவிற்கான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டோம். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து சிறப்பான படங்களைக் கொடுப்பேன்" எனக் கூறியிருந்தார்.

கதை: படத்தின் கதையைப் பொறுத்தவரையில் கணவன் மனைவி தம்பதியர் தாங்கள் புதிதாக வாங்கிய வீட்டில் தங்கி தங்களது விடுமுறையைக் கொண்டாடச் செல்கின்றனர். அப்படிச் சென்றவர்கள் தாங்கள் தங்கிய வீட்டின் எதிர் வீட்டில் விளக்கு எரிவதைப் பார்கின்றார்கள். ஆனால் தங்களது புதிய வீட்டின் அருகில் யாருமே இல்லை என தெரிந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது. இதனால் எதிர் வீட்டில் யார் இருக்கின்றார்கள் எனத் தெரிந்து கொள்ள செல்கின்றார்கள். அங்கு போய் பார்த்தால் இவர்களைப்போலவே ஒரு ஜீவாவும் பிரியா பவானி சங்கரும் உள்ளனர். இது இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவர்களால் அவர்களுக்கு என்ன பிரச்னை நடைபெற்றது? அவர்களால் இவர்களுக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டது என்பதை, மிகவும் திரில்லாக படத்தினைக் கொண்டுபோயிருப்பார்கள்.

ஓடிடி: இந்நிலையில் பிளாக் படம் இன்று முதல் அதாவது நவம்பர் 1ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. படத்தினை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்களுக்கும் படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கும் இந்தத் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications