ஓடிடி ரசிகர்களே ஓடியாங்க.. ஜீவாவின் பொங்கல் பிளாக்பஸ்டர் ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஓடிடி அப்டேட் இதோ!

சென்னை: ஜீவாவுக்கு பல படங்கள் ஃபிளாப் ஆனாலும், எப்போவாவது அத்திப்பூத்தது போல சிவா மனசுல சக்தி, கோ என சில வெற்றிப் படங்கள் கிடைத்து விடும். அந்த வரிசையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி அதிகபட்சமாக சுமார் 35 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில், அந்த படமும் ஓடிடியில் விரைவில் வெளியாக போகிறது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியான பிரபாஸின் ராஜாசாப் திரைப்படம் நேற்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஓடிடி ரசிகர்களையும் பயங்கர கடுப்பில் ஆழ்த்திய நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜீ 5 தமிழில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Jiiva s Thalaivar Thambi Thalaimaiyil OTT platform and release date details are here

இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.

வெற்றிப் பெற்ற தலைவர் தம்பி தலைமையில்: கடந்த ஆண்டு பொங்கலுக்கு விஷாலின் மத கஜ ராஜா திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. மேலும், ரசிகர்கள் அந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையும் கொடுத்தனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு பராசக்தி திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து அதிக வசூல் ஈட்டிய படமாக ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மாறியது. சுமார் 35 கோடி வரை உலகளவில் இந்த படம் வசூல் ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடிகர் ஜீவாவுக்கும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படம் கிடைத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்: பராசக்தி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்திலும் ராஜாசாப் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் வெளியாகி உள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில் நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளது. வரும் பிப்ரவரி 12ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஓடிடி ரசிகர்களுக்காக இந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X