போடு வெடிய! ஹார்ட் பீட் சீசன் 3 முதல் விஜய் சேதுதிபதியின் காட்டான் வரை.. ஜியோ ஹாட்ஸ்டாரின் அதிரடி அறிவிப்புகள்

சென்னை: ஜியோ ஹாட் ஸ்டார் நடத்திய பிரமாண்டமான சவுத் அன்பவுண்ட் நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய அறிவுப்புகளும் அப்டேட்களும் வெளியிடப்பட்டது. இது குறித்து காணலாம்.

ஹாட் ஸ்டார் உடன் ஜியோ இணைந்த பின்னர் அதன் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என்பது இயல்பாகவே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலே ஜியோ ஹாட்ஸ்டாரின் சந்தாதாரராக மாறிவிடுகிறார்கள். அதுவும் இன்றைய காலத்தில் ஓடிடிகள் மக்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்று வருவதால் ஜியோ ஹாட் ஸ்டாரும் முன்னேறி வருகிறது.

இப்படி இருக்கும்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜியோ ஹாட்ஸ்டார் பல முக்கிய அறிவிப்புகளை, அப்டேட்களை வெளியிட்டது. அதாவது, " இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் முதல் 7 சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதேபோல், மலையாளம் பிக்பாஸை தொகுத்து வழங்கும் மோகன்லால், தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனா மற்றும் தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Jio Hotstar South Unbound Update Details Heart Beat Season 3 to Vijay Sethupathi Kaattan And More
Photo Credit:

புதிய அப்டேட்கள்: மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காக்கா முட்டை, காதலும் கடந்து போகும், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள வெப் சீரிஸான காட்டான் வெப் சீரிஸின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. நடிகை ரேவதி இயக்கத்தில், பிரியாமணி மற்றும் ஆரி நடிப்பில் வெளியான குட் வைஃப் சீசன் ஒன்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், இரண்டாவது சீசனுக்கான முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

ஹார்ட் பீட்: அதேபோல் தமிழ் ரசிகர்களை வியாழக்கிழமை ஆனாலே ஹார்ட் பீட் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய ஹார்ட் பீட் வெப் சீரிஸின் மூன்றாவது சீசனுக்கான முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் லக்கி தி சூப்பர் ஸ்டார் வெப் சீரிஸ், எரும சாணி விஜய் குமார் நடிக்கும் ரிசார்ட் வெப் சீரிஸ், கவுரி கிஷன் நடிக்கும் லவ் ஆல்வேஸ் வெப் சீரிஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள கெணத்தைக் காணோம் என்ற வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரிலீஸ் தேதிகள்: இது மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படைப்புகள் குறித்த அறிவிப்பையும் ஜியோ ஹாட்ஸ்டார் நேற்றைய நிகழ்ச்சியில் வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் இவற்றின் ரிலீஸ் தேதிகள் குறித்து ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X