கௌதம் மேனனின் ஜோஷ்வா இமைபோல் காக்க.. எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமாகுது தெரியுமா?

சென்னை: கௌதம் மேனன் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்தினார். சூழல் இப்படி இருக்க வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை மீண்டும் எடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தச் சூழலில் அந்தப் படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கிறது. திரையரங்குகளில் கிடைக்காத வரவேற்பு ஓடிடி தளத்திலாவது கிடைக்குமா என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறார் கௌதம் மேனன்.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

Joshua Imai Pol Kaaka Movie Streaming on Amazon Prime OTT From Today

ஸ்டைலிஷ் இயக்குநர்: கௌதம் மேனன் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். தனது ஒவ்வொரு படத்தையும் ப்ளெசண்ட்டாக, ஹீரோவை வேறு மாதிரியான ஒரு அழகாக காண்பிக்கக்கூடியவர் அவர். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் படங்கள். அந்தப் படங்களில் அவரது லுக் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட். அதேபோல் கமல் ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு ஆகியோரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் கௌதம்.

காதல் இயக்குநர்: ஸ்டைலிஷ்ஷாக மட்டுமின்றி தன்னுடைய திரைக்கதை, வசனம், மேக்கிங் மூலம் அசரடிப்பவர் கௌதம் மேனன். அதேபோல் காதல் ஜானர் என்றால் மனிதர் உற்சாகமாகிவிடுவார். அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் ஜானர் படங்கள் உச்சத்தில் இருப்பவை. முக்கியமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆக்‌ஷன் ஜானரில் அவர் படம் எடுத்தால்கூட; அதில் அவரும் லவ் போர்ஷன் தனித்து தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய கௌதம்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதனால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் கௌதம் மேனன் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கினார் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் சிம்புவை வைத்து அவர் இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு மெகா ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நெகட்டிவ் ரெஸ்பான்ஸ்: வெந்து தணிந்தது காடு படத்துக்கு ரசிகர்கள் தங்களது சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். எனவே கண்டிப்பாக ஜோஷ்வா இமைபோல் காக்க படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று கௌதம் மேனன் எதிர்பார்த்தார். ஆனால் படத்துக்கு நெகட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்தது. முக்கியமாக படத்தின் மேக்கிங், திரைக்கதை எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதிலும் ஹீரோ வருண் படத்துக்கு சுத்தமாக செட் ஆகவில்லை. தன்னுடைய கடன் அடைவதற்கு உதவி செய்த வேல்ஸ் க்ரூப்புக்காக அவர்களது வாரிசு வருணை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருந்தார் கௌதம்.

ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டரில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்காததால் படக்குழுவும் கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தது. இந்நிலையில் ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்றிலிருந்து அந்தப் படத்தை பார்க்கலாம். தியேட்டரில் கிடைக்காத வரவேற்பு ஓடிடியிலாவது கிடைக்குமா என்று படக்குழுவினர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X