ஓடிடியில் வெளியாகிறதா ஜோஸ்வா இமை போல் காக்க ?... தயாரிப்பாளர் விளக்கம் !

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய உள்ள ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராக்கே என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு,டிடி என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராக்கே என்பவர் முந்தைய பிக்பாஸ் சீசன் போட்டியாளர் ஆரோவின் காதலியாவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வருணுக்கு ஒரு பக்கம் திருப்பு முனை என்றால் இந்த படம் இன்னொரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் வருண்

பிக் பாஸ் வருண்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருண் கலந்துகொள்ளும் முன்னரே ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வருண் பிரபலமடைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அக்ஷன் திரைப்படம்

அக்ஷன் திரைப்படம்

லண்டனில் இருந்து சென்னை வரும் பெண்ணைப் பாதுகாக்கும் மெய்க்காப்பாளராக, வருண் நடித்துள்ளார். கௌதம் மேனனின் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இப்படமாக உருவாகி உள்ளது. குறிப்பாக வருண் நடிப்பு மற்றும் ஆக்சனை பார்க்கும்போது இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர அதிக வாய்ப்பு உள்ளது.

ஓடிடியில்

ஓடிடியில்

இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் ஊடக ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜோஸ்வா இமைபோல் காக்க படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருப்பதாகவும், படத்தை நேரடியாக OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பிப்ரவரியில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தோம், கொரோனா பரவல் காரணமாக திரையரங்களுக்கு கட்டுப்பாடு இருப்பதால் OTTல் படத்தை நேரடியாக வெளியிட விரும்புவதாக அவர் கூறினார்.

டிரைலர்

டிரைலர்

இப்படம் 2020 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் , கொரோனா தொற்று பரவல் காரணமாக காலவரையின்றி தாமதமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X