Bougainvilla: அடுத்தடுத்த மறைக்கப்படும் உண்மைகள்.. வெளிவருமா.. ஓடிடியில் நாளை வெளியாகும் போகன்வில்லா

சென்னை: பகத் ஃபாசில், ஜோதிர்மயி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் லீட் கேரகடர்களில் நடித்து கடந்த அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் போகன்வில்லா. படத்தை அமல் நீர்த் இயக்கியிருந்த நிலையில் சைக்காலஜிகல் திரில்லர் ஜானரில் படம் மாஸ் காட்டியது.

அடுத்தடுத்து சைக்கோ திரில்லர் பாணியில் படங்களை கொடுத்து வருகிறார் அமல் நீர்த். இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்திற்கு முன்னதாகவே இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போகன்வில்லா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

fahadh faasil sony liv ott

போகன்வில்லா படம்: இயக்குநர் அமல் நீர்த் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது போகன்வில்லா படம். சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியிருந்த இந்தப் படத்தில் பகத் ஃபாசில், ஜோதிர்மயி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். விபத்து காரணமாக தன்னுடைய நியாபகத்தை இழந்த ஜோதிர்மயி, பெண்கள் கடத்தலில் அவருக்கு ஏற்படும் தொடர்பு ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் அமல் நீர்த். இந்தப் படத்தில் அமல் நீர்த்தின் நெருங்கிய நண்பரான பகத் ஃபாசில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார்.

சோனி லைவில் வெளியீடு: சுஷின் ஷியாம் இசையமைப்பில் படத்தின் இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்த நிலையில், நாளைய தினம் இந்தப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி வெளியான ட்ரெயிலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தில் நடிகர்களின் ஆழமான நடிப்பு மற்றும் சைக்கலாஜிகல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஓடிடியிலும் அதிக பார்வைகளை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜோதிர்மயி சிறப்பான கம்பேக்: மலையாள எழுத்தாளர் லாஜோ ஜோஸின் எழுத்தில் வெளியான ரூத்தின்டே லோகம் நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவான நிலையில், பெண் கடத்தலில் ஜோதிர்மயி மீது சந்தேகப்படும் பகத் ஃபாசில் அது தொடர்பான விசாரணை என படம் சிறப்பாக அமைந்தது. தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள ஜோதிர்மயி, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார். படத்தில் அவரது ரீத்து கேரக்டருக்கு உயிர்ப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மறதி நோயால் பாதிக்கப்படும் அவர் அதையொட்டி தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாளை ஓடிடியில் வெளியீடு: படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரமும் இந்தப் படத்தின் பலத்திற்கு முக்கியமான பங்காற்றியுள்ளார். டீ எஸ்டேட், மலைகளுக்கு நடுவிலான பாதைகள், வீட்டின் டீடெயில் என ஒவ்வொரு பிரேமையும் அவர் சிறப்பாக கொடுத்திருந்த நிலையில், சஸ்பென்ஸ் திரில்லருக்கான பதைப்பதைப்பை அவர் ரசிகர்களுக்கு சிறப்பாக கடத்தியிருந்தார். ஆயினும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனத்தையும் படம் பெற்றிருந்தது. இதனிடையே நாளைய தினம் ஓடிடியில் வெளியாகும் இந்தப் படம் அதை தொடர்ந்து வரும் வாரயிறுதி நாட்களில் அதிகமான பார்வைகளை இந்திய அளவில் ரசிகர்களிடையே பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: fahadh faasil sony liv ott
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X