ஜூனியர் என்டிஆரின் தேவாரா.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவாரா பார்ட் 1 திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர்.. எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை அள்ளிய இத்திரைப்படம் ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை குவித்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் வெளியாகாத நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படம் டோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்தது.

jr ntr devara

தேவாரா: இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், பாலிவுட் ஸ்டார் சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

ஓடிடி ரிலீஸ் தேதி: 'தேவாரா' பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் செப்டம்பர் 27 அன்று தியேட்டரில் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. குறிப்பான தெலுங்கில் தேவார படம் அதிக வசூலை அள்ளியது. அந்த வகையில் 'தேவாரா' வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு வசூல் பெரிதாக வரவில்லை என்றாலும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ. 209 கோடி வசூலை பெற்றது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியானது. இப்படம், நவம்பர் 8 ஆம் தேதி Netflix ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேவாரா படம், 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X