Jubilee: இதுக்கு பயில்வானே பரவால போல.. நடிகைகளை இவ்ளோ கேவலமாவா காட்டுறது.. ஜூப்ளி வெப்சீரிஸ் கூத்து!

சென்னை: பாலிவுட் தொடங்குவதற்கு முன்பாக இருந்த இந்தி சினிமா உலகத்தை காட்டும் படியான வெப்சீரிஸாக ஜூப்ளி வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

ஆனால், இந்த வெப்சீரிஸில் வரும் நடிகைகளை இவ்ளோ கேவலமாவா காட்டுவார்கள் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பெரும் விவாதத்தையே நிகழ்த்தி வருகின்றனர்.

Jubilee web series shows actresses in a most ugly way

நடிகைகள் சினிமாவில் வாய்ப்புகளை பெற அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதாக பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு பலரது எதிர்ப்புகளுக்கு ஆளாகி வரும் நிலையில், அவர் நடிகைகளை கேவலப்படுத்துவதை விட இந்த வெப்சீரிஸில் முன்னணி நடிகைகளை படு மோசமாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர் என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோவுடன் படுக்கும் இயக்குநர் மனைவி: காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ராவ் செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த வெப்சீரிஸில் சுமித்ரா எனும் நடிகையாக நடித்துள்ளார்.

ராய் டாக்கீஸ் நிறுவனரும் இயக்குநருமான ஸ்ரீகாந்த் ராயின் மனைவியான சுமித்ரா ஸ்ரீகாந்த் ஜம்ஷத் கான் எனும் இஸ்லாமிய நடிகரை மதன் குமாராக அறிமுகப்படுத்த அழைத்து வந்த நிலையில், அவருடன் கள்ளத் தொடர்பில் சுமித்ரா ஈடுபடுவது போல காட்சிகள் ஆரம்பத்திலேயே இடம்பெற்று அதிர்ச்சியை கொடுக்கின்றன.

Jubilee web series shows actresses in a most ugly way

நடிகருடன் ஓடிப் போக ரெடி: மதன் குமாராக அறிமுகமாக வேண்டிய ஜம்ஷத் கான் சுமித்ரா மீது கொண்ட மோகத்தால் சினிமாவில் ஹீரோவாகாமல் பழையபடி நாடக நடிகராகவே கராச்சிக்கு சென்று விட முடிவு செய்கிறார்.

அவருடன் திருட்டுத்தனமாக ஓடிப் போக தயாராகிறார் சுமித்ரா. ஜம்ஷத் கான் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை காட்டி ஸ்ரீகாந்த் ராயின் வேலைக்காரனான கதையின் ஹீரோ பினோத் இருவரையும் மும்பைக்கு அழைத்து வர முயற்சி செய்ய, அவருடன் வரப்போவதில்லை என்றும் கராச்சிக்கு அந்த நடிகருடன் செல்லப் போகிறேன் என்றும் சுமித்ரா கூறுகிறார்.

Jubilee web series shows actresses in a most ugly way

வாமிகா காபி நிலைமை ரொம்ப மோசம்: அதிதி ராவின் கதாபாத்திரம் இப்படி மோசமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதற்கு சோஷியல் மீடியாவில் சில எதிர்ப்பு விவாதங்கள் கிளம்பி உள்ளன. இது ஒரு புறம் இருக்க இன்னொரு நடிகையாக காட்டும் நம்ம வாமிகா காபியின் கதாபாத்திரம் அதை விட மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் சென்னை படத்தில் தியாகராஜன் குமாரராஜா வாமிகா காபி நடித்த ஜூப்ளி படத்தை பார்த்து இன்ஸ்பையராகித் தான் சிகரெட் பிடிக்கும் காட்சி, படுக்கையறை காட்சி மற்றும் அந்த மழை சீன் எல்லாம் வைத்திருப்பார் போல தெரிகிறது. எல்லாமே அப்படியே இந்த வெப்சீரிஸில் இடம்பெற்றிருக்கிறது.

Jubilee web series shows actresses in a most ugly way

ரெட் லைட் ஏரியா டு ஹீரோயின்: நிலோஃபர் குரேஷி எனும் ரெட் லைட் ஏரியா பெண்ணாக நடித்துள்ளார் வாமிகா காபி. ஜம்ஷத் கான் உடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இவரிடம் இயக்குநராக ஆக ஆசைப்படும் ஜெய் கண்ணா வர பாக்கெட்டில் காசு இல்லாதவன் என துரத்தி அடிக்கிறார்.

பின்னர் இவரே அகதியாக வரும் போது மோசமான ரெட் லைட் ஏரியாவில் சிக்கிக் கொள்ள அங்கிருந்து தப்பித்து சினிமா ஃபனான்ஸியர் ஒருவருடன் கள்ளக் காதலியாக மாறி காசு சம்பாதிக்கிறார்.

அப்படியே சினிமா ஆடிஷன்களில் கலந்து கொண்டு ஹீரோயின் ஆவது போல வாமிகா காபியின் கதாபாத்திரத்தை ரொம்பவே மோசமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே.

Jubilee web series shows actresses in a most ugly way

பயில்வான் ரங்கநாதனை விட மோசம்: நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதாக பயில்வான் ரங்கநாதன் பேசி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் நிலையில், அதை விட மோசமாக பாலிவுட் இயக்குநர் ஜூப்ளி வெப்சீரிஸில் நடிகருடன் இயக்குநர் மனைவி படுக்கையை பகிர்கிறார் என்றும் ரெட் லைட் ஏரியாவை சேர்ந்த பெண் எப்படி பலருடன் காசுக்காக படுத்து நடிகையாகிறார் என்றும் காட்டி உள்ளார் என பல பெண் ரசிகைகள் இந்த வெப்சீரிஸை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X