OTT Release: வீக் எண்ட் பிளான் ரெடியா?..பெத்தி டூ பரிமளா அண்ட் கோ வரை.. ஜூலை மாத டாப் ஓடிடி லிஸ்ட்!
சென்னை: தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத சினிமா பிரியர்களுக்காக வார இறுதி நாட்களைக் கொண்டாட்டமாக மாற்ற வாராவாரம் ஓடிடி தளங்கள் விதவிதமான திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, சோனி லிவ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் காத்திருக்கும் டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் சுவாரசியமான லிஸ்ட் இதோ:
பெத்தி: ராம் சரண் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் 'பெத்தி'. இந்தப் படத்தை புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை பெற்று நல்ல வசூலை அள்ளியது. தற்போது பெத்தி படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பரிமளா அண்ட் கோ: ஜூன் 5-ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'பரிமளா அண்ட் கோ'. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம், தமிழ்க்குமரன் நிறுவனம் மற்றும் பாண்டிராஜ் மூவரும் இணைந்து தயாரித்த இப்படம் ஓரளவிற்கு கணிசமான வசூலை அள்ளியது. இப்படம் ஜூ5 ஓடிடி தளத்தில் ஜூலை 10ந் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது.
தி வெஸ்டீஸ்: 'தி வெஸ்டீஸ்' வெப் தொடர் இரண்டு அத்தியாயங்களுடன் பிரைம் வீடியோவில் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. ஜே.கே. சிம்மன்ஸ் இயக்கத்தில் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், நியூயார்க் நகரத்தின் 'ஹெல்ஸ் கிச்சன்' பகுதியில் நடக்கிறது. கிளாசிக் மாஃபியா கதைகளைப் போன்ற குற்றக் காவியங்கள், கேங்ஸ்டர் நாடகங்கள் மற்றும் குடும்ப அதிகாரப் போராட்டங்களை நீங்கள் விரும்பினால், இந்த 'தி வெஸ்டீஸ்' வெப் தொடரை பார்க்கலாம்.

Balti: மலையாள திரைப்படமான 'பால்டி', திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து சோனி லிவ்-வில் டிஜிட்டல் தளத்தில் நாளை வெளியாகிறது. ஷேன் நிகம் நடித்துள்ள இந்தப் படம், கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான எல்லை நகரமான வேளம்பாளையத்தில் நடக்கிறது. தனது நண்பர்கள் மற்றும் தாயுடன் எளிமையான வாழ்க்கை வாழும், கபடி வீரராக ஆக விரும்பும் உதயன், பால்டி என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறான். ஒரு போட்டியில் உள்ளூர் குற்றத் தலைவனின் அணியை அவன் தோற்கடித்த பிறகு, அவனது வாழ்க்கையின் பாதை மாறுகிறது.
Dose: மருத்துவமனையில் நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரணத்தைக் கண்டுபிடிக்கும் மருத்துவர் ஒருவர் மறைக்கப்பட்ட ரகசியங்களும் விசாரணையைத் தொடங்குகிறார். தனது கடந்த காலத்தால் வேட்டையாடப்படும் ஒரு புலனாய்வாளருடன் கைகோர்த்து, ஒரு ஆபத்தான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். புலனாய்வுத் திரில்லர்கள், மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை JioHotstar ஓடிடி தளத்தில் July 10ந் தேதி பார்க்கலாம். இதுமட்டுமில்லாமல் Sing Geetam, Dug Dug, Kotha Malupu,Ikka என பல படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications