Junior NTR: நடுக்கடலில் இத்தனை படகுகளுடன்.. மிரட்டும் தேவரா படத்தின் மேக்கிங் வீடியோ!

ஐதராபாத்: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்திருந்தார். சையிப் அலிகான் வில்லனாக மிரட்டியிருந்த இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியான நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்தபோதிலும் படம் சர்வதேச அளவில் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 8ம் தேதி இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி அங்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

junior ntr devara movie koratala siva


நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகி கடந்த செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது தேவரா. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இந்தப்படம் உள்ளானது. படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியிருந்த நிலையில் சையிப் அலிகான் வில்லனாக மிரட்டியிருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்தப்படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

தேவரா ஓடிடி ரிலீஸ்: கடந்த 8ம் தேதி ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது தேவரா படம். இந்தப் படத்தில் அனிருத்தின் இசை மேஜிக் செய்திருந்தது. இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள தேவரா படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்துள்ளார் ஜான்வி கபூர்.

படகு சண்டை: இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ராம்சரணுடன் இணையும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில், படத்திற்கு மிகச்சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் முன்னதாக கொடுத்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி சில வாரங்களை நிறைவு செய்து, ஓடிடியிலும் வெளியாகியுள்ள சூழலில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கடலின் நடுவே படகுகளில் சண்டைக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

மேக்கிங் வீடியோ: இந்நிலையில் இதன் மேக்கிங் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சண்டைகாட்சி எப்படி உருவானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இதில் சுற்றிலும் இருக்கும் படகுகளை வைத்து இந்தக் காட்சி எப்படி உருவாகியுள்ளது என்பதை ரசிகர்கள் தெரிந்துக் கொள்ளும்வகையில் படக்குழு வீடியோவாக எடுத்துள்ளனர். படத்தில் சண்டை காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்த நிலையில் இந்த மேக்கிங் வீடியோ மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X