ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா.. எப்போது, எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேவரா. கொரட்டலா சிவா இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக அறிமுகமானார். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டதாம். இந்தச் சூழலில் தேவரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். சினிமா குடும்பத்தின் பின்னணியில் இருந்து அவர் வந்திருந்தாலும் தன்னுடைய திறமையாலும், தனித்துவத்தாலும் இன்று இந்திய அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் ரேஸிலும் கலந்துகொண்டது.அந்தப் படத்துக்கு பிறகு மேற்கொண்டு ஃபேமஸாகிவிட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அவர் கடைசியாக கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா படத்தில் நடித்திருந்தார்.

devara junior ntr

இரண்டு பாகங்கள்: மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இப்படமானது கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஜூனியர் என்.டி.ஆரின் ஆக்‌ஷன் ஓரளவு ரசிக்கும்படியாக இருந்தாலும் படத்தின் மேக்கிங்கோ, ஸ்க்ரீன் ப்ளேவோ சுத்தமாக எடுபடவில்லை என்று ஓபனாகவே பேசினர்.

இரண்டாவது பாகம் வேறயா?: மேலும் முதல் பாகமே இப்படி இருக்கிறதே இதில் இரண்டாவது பாகம் வேறு வரவிருக்கிறது. அதையாவது ஒழுங்காக டெலிவர் செய்வார்களா என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகளை கேட்டுவருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக படம் மொக்கை வாங்கினாலும் வசூலில் சக்கைப்போடு போடுவதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை அந்தப் படம் உலக அளவில் 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது விஜய் நடித்த GOAT படத்தின் வசூலைவிடவும் அதிகம் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவரா ஓடிடி ரிலீஸ்: வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தேவரா ஓடிடியில் எப்போது ரிலீஸ் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகவும்; நவம்பர் 22ஆம் தேதி முதல் ஸ்ட்ரிமிங் செய்யப்படும் என்றும் தெலுங்கு மீடியாக்களில் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.விரைவில் தேவரா ஓடிடியில் தாக்கம் செலுத்துமா என்பது தெரிந்துவிடும்.

ஜூனியர் என்.டி.ஆர் பேட்டி: முன்னதாக தேவரா படம் நெகட்டிவ் விமர்சனத்தை அதிகம் சந்தித்ததை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் அளித்த பேட்டியில், "இப்போது படத்தை ஆராய்வதற்காகவே அதிகம் பேர் பார்க்கிறார்கள். நானும் எனது குழந்தைகளும் படம் பார்க்கும்போது அவர்களுக்கு படத்தை என் ஜாய் செய்து பார்த்தார்கள். அந்த குணம் வளர்ந்த ரசிகர்களாகிய நமக்கு குறைந்துவருகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X