Shaitaan OTT: பில்லி,சூனியம் அடுத்தடுத்து திகிலூட்டிய ஷைத்தான்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
சென்னை: நடிகை ஜோதிகா 26 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து மாஸ் ஹிட்டடித்த ஷைத்தான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கிய திரைப்படம் ஷைத்தான். இதில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.

ஷைத்தான்: அப்பா, அம்மா, அக்கா, தம்பி என சந்தோஷமாக வாழும் ஒரு குடும்பம் விடுமுறை மகிழ்ச்சியாக கழிக்க பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு வழிப்போக்கனாக வரும் மாதவனை, இந்த குடும்பம் எதேச்சையாக தாபா ஒன்றில் சந்திக்கிறது. அப்போது, சப்பாத்தி சாப்பிட அடம் பிடிக்கும் ஜோதிகாவின் மகள், வழிப்போக்கனாக மாதவன் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான். இதையடுத்து அவன் கொடுக்கும் லட்டை சாப்பிடுகிறாள். அந்த லட்டை சாப்பிட்ட பின், அஜய் தேவ்கனின் மகள் ஜான்விக்கு ஏதோ மாற்றம் நடக்கிறது.
பில்லி,சூனியம்: அதனைத் தொடர்ந்து, அஜய் தேவ்கனின் பண்ணை வீட்டுக்கு மாதவன் வர, குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. இவன் எப்படி வந்தான், எதற்காக வந்தான் என்று யோசிப்பதற்குள் ஜான்வி, மாதவானின் காட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறாள். அதன் பிறகு தான் மகள் ஜான்வி பில்லி, சூனியம் சிக்கி இருக்கிறாள் என்பது தெரியவருகிறது. படத்தின் முதல் பாதியில் அமானுஷ்யம், அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை நகர்கிறது. இறுதியில் நல்லவை வென்றதா.. தீயதை வென்றதா? என்பதுதான் படத்தின் கதை. இப்படம் 2023ம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான வஷ் எனும் படத்தின் ரீமேக் ஆகும்.
ஓடிடி ரிலீஸ்: மார்ச் 8ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் ரூ .200 கோடி ரூபாய்யைத் தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வசூலை அள்ளிய இத்திரைப்படம், மே 3 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த படக்குழுவினர் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











