ஜோதிகா நடித்த விவகாரமான கதை.. பணத்தாசையால் வீணாப்போன 5 மனைவிகள்.. டப்பா கார்டெல் விமர்சனம்!

சென்னை: டப்பா கார்டெல் சீசன் 1 அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்த ஒரு இணையத் தொடராகும். இந்த தொடரை, ஹிதேஷ் பாட்டியா இயக்கி உள்ளார். அதில் ஷபானா ஆஷ்மி, ஜோதிகா, ஷாலினி பாண்டே, நிமிஷா விஜயன், அஞ்சலி ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மும்பையில் பணத்திற்காக கஷ்டப்படும் ஐந்து பெண்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்காக நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் வருவது போல, டிபன் பாக்ஸில் போதைப்பொருளை வைத்து கடத்தி வருகின்றனர். பல நாட்களாக போலீசின் கண்ணில் மண்ணை தூவி, பணக்கார வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர்கள் ஒரு போதை பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தப்பித்தார்களா? இல்லையா என்பது தான் டப்பா கார்டெல் வெப் தொடரின் கதை.

Dabba Cartel Jyothika OTT

டப்பா கார்டெல்: கதை ஆரம்பிக்கும் போதே ஒரு காரில் ஒரு கணவனும் மனைவியும் வந்துகொண்டு இருக்க. நீண்ட தூரப்பயணம் என்பதால், கணவனுக்கு தூக்கம் வர, மனைவி வண்டி ஓட்டிட்டு வந்துக்கொண்டு இருக்கிறாள். தொடர்ந்து கார் ஓட்டிவந்தலால், தூக்க கலக்கத்தில், ஒரு மரத்தின் மீது மோத, அவள் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறாள் . அதன் பிறகு தான் அந்த பெண் இறந்ததுக்கு காரணம் தூக்கம் கலக்கம் இல்ல. அந்த பெண் சாப்பிட்ட மன்டிடேலா என்ற மாத்திரை என்பது தெரிய வருகிறது. அந்த இடத்தில் இருந்து கதை ஆரம்பாகிறது.

Dabba Cartel Jyothika OTT

போதை பொருள் மாத்திரை: மன்டிடேலா என்ற மாத்திரை கம்பெனியை நடத்தி வருபவர் தான் ஜோதிகாவின் கணவர் ஷங்கர். அதே கம்பெனியில் வேலை செய்கிறவர் தான் ஹாரி, இவருக்கு எப்படியாவது விரைவில் பணக்காரனாகிய, தன்னுடைய மனைவி ஷாலினி பாண்டேவுடன் ஜெர்மனியில் செட்டில் ஆக வேண்டும் என்பது, நீண்ட நாள் ஆசையாக உள்ளது. இதனால், ஜோதிகாவின் கணவரை எப்படியாவது கைக்குள் போட்டுக்கொண்டு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருக்கார். இந்த நேரத்தில் தான். இந்த மன்டிலா மாத்திரை தடை செய்யப்பட்ட மாத்திரை என்றும், இதை தயாரித்து விற்பனை செய்த கம்பேனிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு செய்தி வருகிறது. இதனால் பதறிப்போன ஜோதிகாவின் கணவர், இதிலிருந்து தப்பிப்பதற்காக ஷாலினி பாண்டேவின் கணவரிடம் அந்த மாத்திரைகளை அழிக்க சொல்லுகிறார்.

ஷாலின் பாண்டே: இது ஒரு பக்கம் இருக்க, ஜோதிகாவுக்கு தன்னுடைய கணவரை சுத்தமா பிடிக்கவே இல்லை. இவரிடம் இருந்து எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என்று அதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறாள். அதேசமயம் ஹீரோ ஹரியின் மனைவியான ஷாலின் பாண்டிடே, தன்னுடைய கணவருடைய ஆசைப்படி ஜெர்மனியில் செட்டிலாக வேண்டும் என்பதற்காக, தன்னால் முடிந்த வேலைகளை செய்து பணத்தை சேர்ந்து வருகிறாள். அதாவது, வீட்டிலேயே உணவு செய்து அதை ஒரு டப்பாவில் அடைந்து டெலிவரி செய்து வருகிறாள். அவளுக்கு உதவியாக நிமிஷா விஜயன் இருக்கிறாள்.

Dabba Cartel Jyothika OTT

டிபன் பாக்ஸில் போதை பொருள்: நிமிஷா விஜயனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஒருவரை காதலித்து வருகிறாள். ஆனால், அவன், கஞ்சா விற்கும் ஒரு மோசமானவன் என்பது அவளுக்கு தெரியாது. ஒரு நாள் நிமிஷம் விஜயன் காதலனுடன் நெருக்கமாக இருக்கிறாள். அதை அவளுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்துக்கொள்கிறான். பின் அந்த வீடியோவை காட்டி மிரட்டிய காதலன். ஒரு பையை கொடுத்து, இதில் இருக்கிற கஞ்சாவை, நான் சொல்லும் இடத்தில் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால், இந்த வீடியோவை நெட்டில் விற்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்ட நிமிஷா விஜயன் வேறு வழியில்லாமல் அந்த வேலையை செய்கிறாள். அதற்காக, ஷாலினி பாண்டே தயாரித்து கொடுக்கும் டிபன் பாக்ஸில் அந்த போதை பொருளை மறைத்து வைத்து டெலிவரி செய்கிறாள்.

5 பெண்கள் செய்யும் வேலை: ஒரு கட்டத்தில் இந்த விஷயம் ஷாலினி பாண்டேவுக்கு தெரிய, அவளுக்கும் கணவருடன் ஜெர்மனியில் செட்டிலாக பணம் தேவை என்பதால், நாம் இருவரும் சேர்ந்து இந்த போதைப் பொருளை டெலிவரி செய்யலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அப்போதுதான் இந்த தொழிலை செய்வதற்கு பெரிய வீடு ஒன்று பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்க அப்போது அஞ்சலி ஆனந்தின் உதவியை நாடுகின்றனர். அஞ்சலி ஆனந்தும் இவர்களுக்கு ஒரு பெரிய வீட்டை வாடகை பார்த்து கொடுக்கிறாள். அப்போது, ஷாலினி பாண்டேவின் மாமியாரான ஷபானா ஆஸ்மியும் நானும் இதில் கூட்டு சேர்ந்து கொள்கிறேன் என சேர்ந்து கொள்கிறாள்.

Dabba Cartel Jyothika OTT

ஜோதிகா கொடுத்த ஐடியா: இப்படி இவர்களில் கஞ்சா தொழில் நன்றாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில், ஜோதிகா இவர்களிடம் வந்து கஞ்சாவை விற்றால் கம்மியாகத்தான் பணம் கிடைக்கும். அதற்கு பதிலாக என் கணவர் கம்பெனி தயாரித்த மன்டிடேலா என்ற மாத்திரையை சற்று பெயர் மாற்றி விற்றால், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும், இதற்கு நாம தான் முதலாளி, நாம யாருக்கும் பங்கு தர வேண்டாம் என்று சொல்கிறாள். அதற்கு அனைவரும் ஒகே சொல்ல, புது தொழில் படு ஜோராக நடக்கிறது.

வித்தியாசமான கதை: மேலும், இதற்கு முன் கஞ்சா சப்ளை செய்தவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால், அந்த போதைப்பொருள் கும்பல் இவர்களை நோட்டமிட்டு, இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் புகுந்து இவர்கள் பதுக்கி வைத்திருந்த மன்டிடேலா மாத்திரையை எடுத்துக்கொண்டு, இவர்களை அடித்து இழுத்துச்சென்று மிரட்டுகின்றனர். மேலும், இத்தனை வருஷம் நீங்கள் தொழில் செய்தும் போலீசில், மாட்டவில்லை. இதனால், மீண்டும் இந்த தொழிலை நீங்க தான் செய்ய வேண்டும் இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று அனைவரையும் மிரட்ட என்ன செய்வதே என்று தெரியாமல் அனைவரும் கதறி அழுகின்றனர். பணத்திற்காக ஆசைப்பட்டு கடைசியில் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்பதை நினைத்து அனைவரும் கண்கலங்குகின்றனர். இதோடு இந்த டப்பா கார்டெல் சீசன் 1 முடிவடைகிறது. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த விறுவிறுப்பான இணையத் தொடர் அமேசான் மற்றும் நெட்பிலிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: jyothika ஜோதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X