System: ஜோதிகா அந்த சீனில் நடிச்சதுல என்ன தப்பு.. படத்தை முழுசா பார்த்தா அப்படி பேசமாட்டீங்க!

சென்னை: அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா, அசுதோஷ் கோவாரிகர் நடிப்பில் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான படம் தான் சிஸ்டம் (System). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல சிஸ்டம் சரியில்லை என்பதை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக இந்த படம் சொல்லியுள்ளது.

சூர்யாவின் கருப்பு படத்திலும் சட்ட துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து சாமானிய மக்களை வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல் துறையினர் எப்படி ஏமாற்றுகின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டியிருப்பார் ஆர்ஜே பாலாஜி.

Jyotika facing huge troll for System illegal affair scene But if you watch the movie you don t
Photo Credit:

இந்த சிஸ்டம் படத்திலும் பணக்காரர்கள் பெரிய வழக்கறிஞர்களை வைத்து எப்படி தப்பிக்கின்றனர். அவர்களை சாமானியரான ஒருவர் எப்படி சிக்க வைக்கிறார் என்பதே கதை. ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு ஒரே ஒரு சின்ன சீனில் ஜோதிகா போலீஸ் அதிகாரியிடம் கள்ள உறவு வைத்திருக்கும் காட்சியை மட்டும் எடுத்துப் போட்டு பரப்பி அவரையும் அவர் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி வரும் நிலையில், முழு படத்தை பார்த்தால் யாரும் தப்பா பேசமாட்டீங்க என ஜோதிகா ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சரிகாதான் அப்படி செய்கிறார்: நடிகை ஜோதிகா குஷி படத்தில் விஜய்யுடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் படு போலடாக நடித்திருப்பார். அனுஷ்கா வானம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாகவே நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தின் செய்கைகளை வைத்து அந்த நடிகைகளின் கேரக்டர்களையும் தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்வதும் மிகவும் தவறான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அதிகாரியுடன் கள்ள உறவு: தனது கணவர் விபத்தில் மாற்றுத்திறனாளியாக வீல் சேரில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட சிஸ்டம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஜோதிகா உறவு வைத்துக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அந்த காட்சி கூட ஆபாசமாக எல்லாம் இருக்காது. உனக்கு உன் வீட்டில் பொண்டாட்டி இல்லை. எனக்கு என் வீட்டில் புருஷன், குழந்தை இருக்கே என ஜோதிகா சொல்லிவிட்டு கிளம்புவார். அந்த சீனை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி ஜோதிகாவை பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

படத்தை பார்த்தால் பேசமாட்டீங்க: ஆனால், சிஸ்டம் படத்தை முழுவதுமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்த்தால், அந்த சீனில் ஜோதிகா ஏன் அப்படி நடித்தார் என்றும் சரிகாவின் கதாபாத்திரத்துக்கு அந்த காட்சி எவ்வளவு வலிமையானது என்பதும் புரிந்துவிடும் என ஜோதிகாவின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட்டாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிஸ்டம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், தமிழ் டப்பிங்கில் உள்ள அந்த படத்தை அமேசான் பிரைமில் பலரும் பார்த்து வருகின்றனர். நம் நாட்டில் அரசியல் மற்றும் நீதித்துறை என அனைத்து சிஸ்டமும் எப்படி கெட்டுப் போய் கிடக்குதுன்னு கண்டிப்பாக இந்த படத்தை பார்த்தால் புரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X