OTT: நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸிலும் நடித்துள்ள ஜோதிகா.. டப்பா கார்டெல் டீசரே சும்மா மிரட்டுதே!

மும்பை: சென்னையில் இருந்து சூர்யாவுடன் மும்பைக்கு சென்று செட்டிலான ஜோதிகா தொடர்ந்து இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் இணைந்து ஷைத்தான் படத்தில் நடித்துள்ள ஜோதிகா அடுத்து நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

அதன் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களை வெயிட்டிங்கிலேயே வெறியேற்றுகிறது.

Jyotika starrer in Dabba Cartel web series will stream soon on Netflix

கொரோனா லாக்டவுன் சமயத்திலேயே ஓடிடி பக்கம் ஒதுங்கி தனது பொன்மகள் வந்தாள், கணவர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களை டைரக்ட்டாக ஓடிடியில் வெளியிட்ட ஜோதிகா தற்போது வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் ஜோதிகா: தமிழ் சினிமாவில் ஜோதிகா நடித்து வந்தாலும் அவருக்கு பெரிய அளவில் இங்கே வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் நடித்த படங்களையும் தியேட்டரில் சென்று பார்க்க ரசிகர்கள் ரெடியாக இல்லை. இந்நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் படத்தில் நடித்த ஜோதிகா பாலிவுட்டில் வயதான நடிகைகள் இன்னமும் ஹீரோயின்களாக நடிக்கினர் என்பதை அறிந்துக் கொண்டு அங்கே சென்று அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும் மாதவன் உடன் பல ஆண்டுகள் கழித்தும் நடித்துள்ளார். ஷைத்தான் என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படம் வரும் மார்ச் 8ம் தேதி தியேட்டர்களில் மிரட்ட வருகிறது. மேலும், சில பாலிவுட் படங்களிலும் ஜோதிகா கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஓடிடியில் ஜோதிகா: பாலிவுட்டுக்கு சென்ற நடிகை ஜோதிகா நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உருவாகி உள்ள Dabba Cartel எனும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியுடன் இணைந்து இந்த வெப்சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். அதன் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கோலமாவு கோகிலா ஸ்டைல் கதை: நயன்தாரா நடித்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை போல இந்த வெப்சீரிஸில் பெண்கள் எப்படி டிபன் பாக்ஸ் மூலம் போதைப் பொருட்களை கடத்துகின்றனர் என்கிற கதையாக உருவாகி உள்ள வெப்சீரிஸில் தான் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X