Kaantha OTT: தியேட்டரில் மண்ணை கவ்விய காந்தா.. ஓடிடியில் தாக்குபிடிக்குமா?

சென்னை: இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்த திரைப்படம் காந்தா. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 14ந் தேதி வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுளள்து.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது. இப்படத்தில் மூத்த இயக்குனரான சமுத்திரக்கனி, துல்கர் சல்மான் சிறந்த நடிகராக வருவதற்கு காரணமானவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் மீணடும் துல்கர் சல்மான் 'சாந்தா' என்ற படத்தில் நடிக்கிறார். ஆனால், படத்தின் முடிவை மாற்றுமாறு துல்கர் சல்மான் சொல்ல இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு படம் கைவிடப்படுகிறது.

Kaantha OTT Netflix
Photo Credit:

காந்தா படத்தின் கதை: ஒருகட்டத்தில் மாடர்ன் ஸ்டுடியோ படத்தை எடுத்தே ஆக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததால், சமுத்திரக்கனி, துல்கல் சல்மான் ஆகியோர் மீண்டும் படத்தை தொடருகின்றனர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது, முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. படத்தின் பெயரை காந்தா என்று துல்கர் சல்மான் மாற்றுகிறார். இயக்குனரின் வளர்ப்பு மகளான குமாரி (பாக்யஸ்ரீ போர்ஸ்) ஹீரோயினாக நடிக்க இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்கின்றனர்த. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் குமாரி கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். குமாரியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் காந்தா படத்தின் கதை.

ஓடிடி ரிலீஸ்: காந்தா படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். இருவரும் படம் முழுக்க நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்கள். ஏமாற்றம், கோபம், சோகம்,காதல் என அனைத்து பரிமாணத்திலும் மம்முட்டியின் மகன் என்பதை துல்கர் சல்மான் நிரூபித்துவிட்டார். ஆனால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தியேட்டரில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், காந்தா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 12ந் தேதி வெளியாக உள்ளது. தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X