அந்த நடிகரின் படமும் ஓடிடியில் ரிலீஸ்… வஞ்சத்தால் ஏமாறும் இளைஞனின் கதை!
சென்னை : புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள நடுவண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
Recommended Video
இந்த படத்தில், பரத் முதன்மை கதாபாத்திரத்திலும், அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளனர். சார்லி, யோக் ஜிபி, அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வஞ்சம் மற்றும் அறியாமையில் சிக்கி ஏமாறும் நிவாஸ் என்கிற இளைஞனின் கதை தான் நடுவண். இதில் நிவாஸ் கதாபாத்திரத்தில் பரத் நடித்துள்ளார்.

அறிமுகம்
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பரத். தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சவாலான எதிர்மறையான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

வரவேற்பை பெற்றது
இதையடுத்து, பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரத்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திலிருந்து இவர் காதல் பரத் என அழைக்கப்பட்டு வருகிறார்.

ஊரடங்கில்
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கனுடன் ராதே படத்தில் நடித்திருந்தார். மேலும் இரண்டு மலையாள படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார் பரத்.

ஏராளமான நடிகர்கள்
சரண் குமார் இயக்கத்தில் நடுவண் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நடித்திருக்கும் கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சார்லி, யோக் ஜிபி, அருவி பாலா, தசரதி குரு, ராஜா ராணி கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஷராங்கன் கதையில்
இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார், கார்க்கி பாடல்களை கார்க்கி எழுதியுள்ளார். இனிது இனிது, இசக்கி, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

நடுவண் ஒடிடியில்
நடிகர் பரத் எப்போதும் மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். தற்போது முதல்முறையாக, இந்தப் படத்தில் ஒரு தந்தை கேரக்டரில் நடித்துள்ளார். மலைப் பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் திரைப்படம், ஏராளமான சவால்களை கொண்டிருந்தது. நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு தயாராக இருந்த இந்த திரைப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில்வெளியாக உள்ளது. ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாக வில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











