கல்கி 2898 ஏடி ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸானது. பாகுபலி படத்தைவிடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இந்தச் சூழலில் படத்தின் ஓடிடி தேதி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் சலார் திரைப்படம் வெளியானது. கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்து; கன்னட நடிகர் யஷ்ஷுக்கு தரமான சம்பவம் செய்த பிரசாந்த் நீல் இயக்குநர் என்பதால் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் பிரபாஸ். ஏனெனில் அதற்கும் முன்னதாக அவர் நடித்த ஆதிபுருஷ் படம் படு மொக்கை வாங்கியது. எனவே சலார் தனக்கு பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பியிருந்தார். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக ரிசல்ட்டை கொடுத்தது.

OTT Kalki 2898 AD Prabhas 2898

கல்கி 2898 ஏடி: சூழல் இப்படி இருக்க நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க கமிட்டானார் பிரபாஸ். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால்; இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ். படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் கமிட் செய்தார்கள்.

படம் ரிலீஸ்: படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. பிரமாண்ட பட்ஜெட், பான் இந்தியா ஸ்டார்களின் ஐக்கியம் என எக்கச்சக்க ஹைப்போடு வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு தியேட்டருக்கு சென்றனர். ஆந்திரா, தெலங்கானாவின் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அங்கு படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன.

OTT Kalki 2898 AD Prabhas 2898

தமிழ்நாட்டில் டல்: ஆனால் தமிழ்நாட்டில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக கமல் ஹாசன், அமிதாப் பச்சனை எல்லாம் படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் என்றும் ஓபனாக கூறினர். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆனதாகவே கூறப்படுகிறது. இதேபோல்தான் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு நிகழ்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கல்கி படம் ஒர்க் அவுட்டாகாமல் போனதற்கு அதன் கதையும், மேக்கிங்கும்தான் காரணம் என்று கருதப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்: திரையரங்குகளில் சுமாரான வரவேற்பையே பெற்ற கல்கி திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 29அம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X