Kalki OTT: கல்கி 2898 ஏடி ஓடிடி உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்.. அதுவும் இத்தனை கோடிக்கா?

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என தெரிகிறது. அடுத்த பாகத்திலாவது வந்தால் சரி என்றும் எண்ணத் தோன்றுகிறது.

OTT Kalki

நாக் அஸ்வின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என கிளைமேக்ஸில் போட்டுள்ள நிலையில், இந்த கதைக்கு துணையாக மேலும், சில படங்கள் உருவாகும் என தெரிகிறது. 2ம் பாகம் எப்போது வரும் என்றெல்லாம் சொல்லாமல் அப்படியே முடித்து அனுப்பி விட்டனர். இந்நிலையில், ஓடிடியில் கல்கி திரைப்படத்தை வெளியிடும் உரிமத்தை அதிக தொகை கொடுத்து எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

அள்ளிய அமேசான் பிரைம்: பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து ஆட்டையை போட்டு விடும். ஆனால், பொன்னியின் செல்வன் போன்ற பீரியாடிக் படங்களை அமேசான் பிரைம் தான் வாங்கி வருகிறது. இந்நிலையில், கல்கி 2898 ஏடி திரைப்படத்தையும் பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டரில் படம் போடும் போதே டிஜிட்டல் பார்ட்னர் அமேசான் பிரைம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

இத்தனை கோடியா?: அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் கொடுத்து பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 600 கோடி பட்ஜெட்டில் ஒடிடி உரிமமே 200 கோடி லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவை 100 கோடிக்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாட்கள் போதும்: கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய லாபத்தையே தயாரிப்பாளருக்கு கொடுக்கும் என சினிமா வட்டாரத்தில் உறுதியாக கூறுகின்றனர். தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ஹனுமான் திரைப்படம் மட்டுமே 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அதன் வசூலை 2 நாட்களில் கல்கி 2898 ஏடி படம் முறியடித்து விடும் என்கின்றனர்.

ஓடிடி ரிலீஸ் எப்போது?: கல்கி 2898 ஏடி நிச்சயம் 4 வாரத்தில் வெளியாகாது என்றும் 8 வாரம் கழித்துத் தான் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்று கூறுகின்றனர். ஜூலை 27ம் தேதி வெளியாகி உள்ள இந்த படம் செப்டம்பர் 26ம் தேதி ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதற்கு முன்னதாக ரென்ட் கட்டி படம் பார்க்கும் வசதியில் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Read more about: ott kalki ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X