Kalki OTT: கல்கி 2898 ஏடி அமேசான் பிரைமில் எப்போ ரிலீஸ் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.

மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என தெரிகிறது. பிரபாஸ் பைரவா எனும் கதாபாத்திரத்தில் காட்டப்பட்ட நிலையில், அவர் தான் கர்ணனின் மறு அவதாரம் என்றும் நாக் அஸ்வின் கதை கட்டியுள்ளார்.

OTT Kalki Amazon Prime

கல்கி 2ம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அமேசான் பிரைமில் அடுத்த வாரமே கல்கி 2898 ஏடி வெளியாகிறது.

அமேசான் பிரைமில் கல்கி: பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி விடும். ஆனால், பொன்னியின் செல்வன் போன்ற பீரியாடிக் படங்களை அமேசான் பிரைம் தான் வாங்கி வருகிறது. இந்நிலையில், கல்கி 2898 ஏடி திரைப்படத்தையும் பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டரில் படம் போடும் போதே டிஜிட்டல் பார்ட்னர் அமேசான் பிரைம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

பெரிய தொகைக்கு: அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் கொடுத்து பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 600 கோடி பட்ஜெட்டில் ஒடிடி உரிமமே 200 கோடி லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவை 100 கோடிக்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 1100 கோடி வசூல் செய்து ஜவான் படத்தின் வசூலையும் இந்த படம் முந்தியிருக்கிறது.

OTT Kalki Amazon Prime

ஓடிடி ரிலீஸ் தேதி: கல்கி 2898 ஏடி திரைப்படம் ஜூலை 27ம் தேதி வெளியான நிலையில், 8 வாரங்கள் கழித்து வெளியாகும் என பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாக போவதாக அறிவித்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அடுத்த வாரமே ஓடிடியில் கல்கி 2898 ஏடி வெளியாகவுள்ளது.

பிரபாஸ் படு பிஸி: சலார் 2 படத்தில் நடித்து வரும் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் ராஜாசாப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த 2 படங்களையும் முடித்து விட்டு ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 படங்களிலும் பிரபாஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், பல ஆயிரம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X