Kalki: அதிரடி ஆக்சன் படம் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் ‘கல்கி’ படத்தை பாருங்க!

சென்னை: மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், வலம் வருபவர் டொவினோ தாமஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்களில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன. இவர் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கல்கி. இப்படம் குறித்து இப்போது பார்க்கலாம்.

பிரவீன் பிரபாரம் இயக்கத்தில், லிட்டில் பிக் பிலிம்ஸின் கீழ் சுவின் கே. வர்கி மற்றும் பிரசோப் கிருஷ்ணா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கல்கி. இப்படத்தில், சிவாஜித் பத்மநாபன் , சம்யுக்தா மேனன், வினி விஸ்வ லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

Kalki is a Malayalam action movie starring Tovino Thomas can be watched in OTT

டொவினோ தாமஸின் கல்கி: மலையாளத் திரைப்படமான கல்கி 2019ம் ஆண்டு தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ஆகும். கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் நஞ்சன்கோட்டா என்கிற கிராமம் DYP என்ற அரசியல் கட்சியின் தலைவரான அமர்நாத்தின் கையில் உள்ளது. அந்த கிராம மககள் அமர்நாத் தன் கட்டுக்குள் வைத்திருக்க அவர்களை அச்சுறுத்தி சித்திரவதை செய்கிறான். இவன் அச்சுறுத்தலுக்கு பயந்த பலர் வீடு,நிலம் என அனைத்தையும் விட்டுவிட்டு வேறு இடத்தில் குடியேறுகின்றனர். மேலும், அமர்நாத்தின் நஞ்சன்கோட்டா கிராமத்தில் ரௌடிகளை வைத்து வெடிகுண்டு தயாரிப்பு, துப்பாக்கி தயாரிப்பு போன்ற சட்டவிரோத வேலைகளையும் செய்து வருகிறான்.

படத்தின் கதை: இதையடுத்து தேர்தல் அறிவிப்பு வர, DYP கட்சியின் வேட்பாளராக அமர்நாத்தின் சகோதரர் அப்பு நிறுத்தப்படுகிறார். இந்த வேட்பாளருக்கு எதிராக வாக்கு சேகரித்த லக்ஷ்மணன் பொது இடத்தில் அமர்நாத்தின் உதவியாளன் உம்மரால் கொல்லப்படுகிறான். மக்கள் கண் முன் ஒரு கொடூர கொலை நடந்தும் யாரும் சாட்சி சொல்ல முன்வராததால், போலீசார் திணறுகின்றனர். அமர்நாத்தாலும், ரௌடிகளாளும் நாளுக்கு நாள் நஞ்சன்கோட்டா கிராம் பல பிரச்சனை சந்தித்து வருகிறது.

அதிரடி ஆக்ஷன்: இந்த நேரத்தில் நஞ்சன்கோட்டா காவல்நிலையத்திற்கு புது எஸ்ஐயாக டொவினோ தாமஸ் வருகிறார். அந்த கிராமத்தில் இருக்கும் ரௌடிகளுக்கு வார்னிங் கொடுத்து ரௌடிகளை ஓடவிடுகிறார். இதையடுத்து DYP கட்சியின் தலைவர் அமர்நாத் என்ன ஆனார்? கிராம மக்கள் மீண்டும் ஊருக்குள் வந்தார்களா? என்பதுதான் கல்கி படத்தின் கதை. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் டொவினோ தாமஸ் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார்.

ஓடிடியில்: ஒரு திரைப்படம் என்றால், அந்த படத்தில் ஹீரோயின் ஆட்டம், காதல், ரொமான்ஸ் இருக்கும். இந்த படத்தில் சம்யுக்தா மேனன் இருந்தும், அவர் பெயர் அளவிற்கு வந்து போகிறார். காதலோ, பாட்டோ, ரொமான்ஸோ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க அதிரடியான அடிதடி ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க உள்ளது. தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த திரைப்படம் தற்போது ஜியோசினிமா, ஜீ5 போன்ற ஓடிடித்தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் உள்ளது. அதிரடி ஆக்ஷன் படத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X