ஓடிடியில் விக்ரம்..ரவுண்டு கட்டும் தனுஷ், விஜய் சேதுபதி படங்கள்!

சென்னை : வாரந்தோறும் திரையரங்குகளில் சிறப்பான படங்கள் ரிலீசாவது போல ஓடிடியிலும் நல்ல படங்களை பார்க்க முடிகிறது.

வார வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களையும் ரசிகர்கள் தற்போது உற்று நோக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த வாரமும் பல படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. அதில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களும் இடம்பெற்றுள்ளன.

திரையரங்குகளில் படங்கள்

திரையரங்குகளில் படங்கள்

கொரோனா பாதிப்பு மட்டுப்பட்ட நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட காலங்களாக திரையரங்குகளில் ரிலீசாக காத்திருந்த பல படங்கள் அடுத்தடுத்து மற்ற படங்களை பாதிக்காத வண்ணம் வெளியாகி திரையரங்குகளை அதிர வைத்து வருகின்றன.

ஆரோக்கியமான மாற்றம்

ஆரோக்கியமான மாற்றம்

வெளியாகும் அனைத்து படங்களும் சிறப்பான வசூலை பெற வேண்டி, மற்ற படங்களுடன் தங்களுடைய படங்களை இணைத்து வெளியிடாமல் தயக்கம் சிறிதும் இன்றி ரிலீஸ் தேதியை மாற்றும் மனப்பாங்கு தற்போது தயாரிப்பாளர்கள், நடிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் மனப்போக்கு

ரசிகர்களின் மனப்போக்கு

அடுத்தடுத்து சிறப்பான படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்போது அதில் தன்னுடைய நாயகனின் படத்தை மட்டுமே பார்த்துவிட்டு போகும் மனப்போக்கு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இதற்கு பட்ஜெட்டும் ஒரு காரணமாக அமைகிறது. இதனிடையே ஒரு சில வாரங்கள் இடைவெளி விட்டு இந்த திரைப்படங்கள் வெளியாவதால் அனைத்து படங்களும் சிறப்பான கலெக்ஷனை பெற்றுவிடும்.

சிறப்பான ஓடிடி தளங்கள்

சிறப்பான ஓடிடி தளங்கள்

இதனிடையே ஓடிடியும் திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்துள்ளன. திரையில் சென்று அனைத்துப் படங்களையும் பார்க்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த ஓடிடி தளங்கள் அமைந்துள்ளன. வீட்டிலேயே சிறிய அளவிலான கட்டணங்களின்மூலம் சிறப்பான பல படங்களை பார்க்கும் வசதியை ரசிகர்கள் மிகவும் அதிகமாக விரும்பத் துவங்கியுள்ளன.

ஓடிடிக்கு வரவேற்பு

ஓடிடிக்கு வரவேற்பு

மேலும் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய இஷ்டமான இடத்தில் இந்த படங்களை பார்க்கும் வசதியும் உள்ளதால் இந்த ஓடிடி தளங்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது. வார வாரம் இந்த தளங்களில் சிறப்பான பல படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரமும் சிறப்பான படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்

அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்

இந்த வாரம் முதல் நாளிலேயே சாம்ராட் பிரித்விராஜ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதையடுத்து முன்னதாகவே ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஓடிடியில் விக்ரம் படம்

ஓடிடியில் விக்ரம் படம்

இதையடுத்து ஜூலை 8ம் தேதி கமலின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து 25 நாட்களை திரையரங்குகளில் எட்டவுள்ள இந்தப் படம் 400 கோடி ரூபாய் கிளப்பில் விரைவில் இணையவுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்

இதேபோல வரும் ஜூலை 22ம் தேதி தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள தி க்ரே மேன் ஹாலிவுட் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் நடித்துள்ள நிலையில் தமிழிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றன.

அடடே சுந்தரா படம்

அடடே சுந்தரா படம்

இதனிடையே தெலுங்கு மற்றும் தமிழில் நானி மற்றும் நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான அடடே சுந்தரா படமும் ஓடிடியில் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி மற்றும் காதலை இணைத்து வெளியான இந்தப் படம் மிகவும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களியே பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.

விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி படம்

இதனிடையே மாமனிதன், 777 சார்லி உள்ளிட்ட படங்களும் ஜூலையில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாமனிதன் படம் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

இதனிடையே ரங்கா, வாய்தா, வீட்ல விஷேசம், ஜூராக் வேர்ல்ட் டொமினியன், வேழம், மாயோன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படங்கள் தற்போது திரையரங்குகளில் மையம் கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X