ஜியோஹாட் ஸ்டாரின் ₹4,000 கோடி தென்னிந்திய முதலீட்டுக்கு கமல்ஹாசன் மாஸ் ஆதரவு!
சென்னை: இந்தியா முழுவதும் பிரீமியம் OTT தளத்தை மறுசீரமைத்து 10 மாதங்களை நிறைவு செய்துள்ள ஜியோஹாட்ஸ்டார், இனி தென்னிந்தியாவில் மிகப்பெரிய உள்ளடக்க விரிவாக்கத்தை தொடங்க உள்ளதாக சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அறிவித்தது. விழாவில், தென்னிந்தியக் கதைகள் உருவாகும் விதத்தையும், வளர்ச்சியடையும் வழிகளையும் முழுமையாக மாற்றும் நோக்கில் புதிய நீண்டகால முதலீட்டு திட்டம் வெளியிடப்பட்டது.
OTTல் "பிரீமியம் அனுபவத்துக்கு" அடித்தளம் போட்ட இந்த தளம், இப்போது தென்னிந்தியாவுக்கு மட்டும் ₹4,000 கோடி முதலீடு செய்து, கதை சொல்லும் கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தயாராகியுள்ளது. இந்த தொகை வெறும் தொடக்கம் மட்டுமே. டிவி + டிஜிட்டல் சேர்த்து தெற்குக்கென ஒதுக்கப்பட்ட மொத்த முதலீடு ₹12,000 கோடி என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அறிவித்தார்.

ஜியோஹாட்ஸ்டார்: இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் பேசுகையில், பார்வையாளர்கள் எங்கு சென்றாலும் திரைகளும் அவர்களைப் பின்தொடர்கின்றன. இது பெரிய மாற்றம். இன்று பிராந்தியம் தேசியமாகிறது, இனத்துறை சர்வதேசமாகிறது. மதுரை, மல்லப்புரம், மண்ட்யா, மச்சிலிபட்டணம் போன்ற ஊர்களில் பிறக்கும் கதைகள் இனி பிராந்திய திரைப்படங்கள் அல்ல, தேசிய கலாசார நிகழ்வுகள்.
கமல் பேச்சு: அதற்கான உதாரணங்கள் தான், காந்தாரா திரைப்படம் கடல் மற்றும் மலை பற்றிய வளத்தை நாடு முழுவதும் எடுத்துச்சென்றது. த்ரிஷயம் , பகுபலி, புஷ்பா போன்ற படங்கள் இந்தியா முழுவதும் பேசப்பட்டன. அதே போல தமிழ் திரைப்படமான விக்ரம், அமரன் கதையின் உண்மைத்தன்மையே மக்கள் விரும்புவார்கள் என்பதை நிரூபித்துள்ளது. திறமை மட்டும் போதாது. படைப்பாற்றல் வளர சூழலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும், கிரியேட்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தளங்கள், கொள்கை நிர்ணயிப்பவர்கள் அனைவரும் அதற்குத் துணை நிற்கும் வகையில் ஜியோஹாட்ஸ்டாரின் புதிய திட்டத்தை ஜியோஹாட்ஸ்டார் தொடங்கி உள்ளது என்றார்.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
நாகார்ஜுனா, மோகன்லால், விஜய்சேதுபதி மற்றும் பல தென்னிந்திய சினிமா பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை விஜய்டிவி பிரபலம் கோவிநாத் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.


Click it and Unblock the Notifications











