வாரே வா.. கமலின் ‘விக்ரம்’ பட டிஜிட்டல் மற்றும் ஒடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போயுள்ளதா?

சென்னை: விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக காத்திருக்கிறது.

விஸ்வரூபம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் ஓடவில்லை. அடுத்த படத்தை பெரிய படமாக கொடுக்க எண்ணிய கமல், இயக்குநர் ஷங்கர் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அந்த படம் அப்படியே கிடப்பில் கிடக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தை விரைவாக நடித்து முடித்திருக்கிறார் கமல்.

அறிமுகமே அசத்தல்

அறிமுகமே அசத்தல்

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசனை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. தனது ஒவ்வொரு படத்திலும், கமல் படத்தின் இன்ஸ்பிரேஷனை வைத்து படமெடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் கமலையே வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அதன் அறிவிப்புக்காக கறி விருந்தெல்லாம் போட்டு ஆரம்பிக்கலாமா என சொன்ன அறிமுக டீசரே வேறலெவலில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மூன்று சிங்கங்கள்

மூன்று சிங்கங்கள்

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் உடன் சேர்ந்து விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என தேசிய விருது பெற்ற 3 சிங்கங்களை ஒன்றாக இணைத்து இந்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும், உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத அளவுக்கு விக்ரம் உருவாகி வருகிறது என்கிற தகவலும் கமல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

ஷூட் ஓவர்

ஷூட் ஓவர்

விக்ரம் படத்தை விரைவில் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்த கமல் 5 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்து, 6வது முறையாக பிக் பாஸ் அல்டிமேட்டையும் நடத்தி வந்த நிலையில், அதனை விட்டு விட்டு, விக்ரம் படத்திற்காக முழு மூச்சாக களமிறங்க கடந்த சனிக்கிழமை விக்ரம் படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 28ம் தேதி திட்டமிட்டபடி விக்ரம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Vikram Movie | Anchor Maheshwari Vijay Sethupathi செம்ம Romance இருக்கு | Filmibeat Tamil
பெரிய தொகைக்கு பிசினஸ்

பெரிய தொகைக்கு பிசினஸ்

விக்ரம் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், அதன் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் 117 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட்டை இந்த தொகையே பூர்த்தி செய்துள்ளதாகவும், இந்த படம் கமலுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் போஸ்ட் தியேட்டரிக்கல் ரிலீசாக விக்ரம் படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X