கமலுக்கு நேரம் சரியில்லையா? ‘தக் லைஃப்’ படத்துக்கு ஓடிடியிலும் சிக்கல்.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சென்னை: மணிரத்னம் இயக்கிய கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம்
5ந் தேதி தியேட்டரில் வெளியானது. இதில், கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் பலர் நடித்தினர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்களை ஏமாற்றி தோல்வியை தழுவியது. இதனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தில் இசைவெளியீட்டு விழாவிலேயே பிரச்சனை ஆரம்பித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதில் பேசிய கமல், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் மொழி வந்தது என்று பேசி இருந்தார். இது சர்சையான நிலையில், கர்நாடகாவில், 'தக் லைஃப்' படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. மேலும், கமல் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் கர்நாடகாவில் படம் தடை செய்யப்படும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கெடு விதித்தது.

Thug life Kamal OTT
Photo Credit:

தக் லைஃப் சர்ச்சை: இதைத்தொடர்ந்து, பேசிய கமல்ஹாசன், இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டத்தை நீதியை நம்புகிறவன். நான் தவறு இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லையெனில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. அந்த மாநிலத்தில் படம் வெளியாகாததால், படக்குழுவிற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மோசமான கதை: இதைத்தொடர்ந்து, தக் லைஃப் படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை சந்தித்தது. படத்தில் கதையே இல்லை என்றும், இது மணிரத்னம் படம் போலவே இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. த்ரிஷாவின் கதாபாத்திரத்தை மிகவும் மோசமாக சித்தரித்துவிட்டதாக பலர் விமர்சித்தனர். விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், கேங்ஸ்டர் கதை என்பதை படத்தை எடுத்தவர்களே நம்பவில்லை. அதற்கான கதையும் இல்லை. கேங்ஸ்டர் என்பதை நம்ப வைக்க ஒரு சீன் கூட படத்தில் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லாமல் கதை நகர்கிறது. த்ரிஷாவை அடைய கமலுக்கும், சிம்புவுக்கும் நடக்கும் போட்டி தான் 'தக் லைஃப்' படத்தின் கதை. இதை கேங்ஸ்டர் படம் என்று எப்படி சொல்வது, படம் முழுக்க கமல்ஹாசனின் ரொமான்ஸ் தான் ப்ளூ சட்டை மாறன் படத்தை கழுவி ஊற்றி இருந்தார். இப்படி படத்திற்கு வந்த தொடர் விமர்சனத்தால் படத்தின் வசூல் சரியான அடிவாங்கியது.

ஓடிடியில் சிக்கல்: தற்போது 'தக் லைஃப்' படத்தின் ஓடிடி ரிலீசிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 130 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், ஒப்பந்தம் செய்து கொண்ட தொகையினை குறைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், இதை படக்குழுவிடம் தெரிவித்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் படக்குழு கவலையில் உள்ளது. இந்த தகவல் மற்ற படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X