தியேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப் ஓடிடியில் ரிலீஸ்.. இங்காவது ரெஸ்பான்ஸ் கிடைக்குமா?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாகியிருந்தாலும் படம் பயங்கரமான அடி வாங்கியது.இந்தியன் 2 போலவே இந்தப் படத்தையும் கழுவி கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். இந்நிலையில் படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் லெஜண்ட் இயக்குநர்களில் ஒருவர் என்று புகழப்படுபவர் மணிரத்னம். அவரும் கமலும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற க்ளாஸிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக மீண்டும் அவர்கள் சேர்கிறார்கள் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தக் லைஃப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. அதுமட்டுமின்றி கமலுடன் சிம்பு முதன்முறையாக இணைந்து நடிக்கவும் செய்திருந்தார்.
அடி வாங்கிய தக் லைஃப்: எக்கச்சக்க எதிர்பார்ப்போடுதன் இந்தப் படம் ரிலீஸானது. கன்னட மொழி குறித்து பேசியதால் அங்கு எழுந்த எதிர்ப்பால் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் கடந்த மாதம் படம் ரிலீஸாகவில்லை. மற்ற இடங்களில் ரொம்பவே ஆர்வத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் மணியும், கமலும் இணைந்து ரசிகர்களை துளிக்கூட திருப்திப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செம ட்ரோல்: படத்தை விமர்சன ரீதியாக அடி வெளுத்த ரசிகர்கள் இந்தியன் 2 படத்தை எப்படி ட்ரோல் செய்தார்களோ அதேபோல் இப்படத்தையும் வைத்து செய்துவிட்டார்கள். இத்தனை வருட் திரை அனுபவத்தில் இந்த இரண்டு படங்களில் வாங்கிய அடி போல் கமல் முன் எப்போதும் வாங்கியிருக்கமாட்டார் என்பதே அனைவரின் கருத்து. அந்த அளவுக்கு ரசிக்ரகளின் ட்ரோல்களும், மீம்ஸ்களும் உச்சக்கட்டத்தில் இருந்தன.
மன்னிப்பு சர்ச்சை: வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படியாக படம் இல்லை. இது ஒருபக்கம் இருக்க படம் ரிலீஸான சில நாட்களில் இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும்; நானும் கமலும் இணைந்து இன்னொரு நாயகனை கொடுக்க திட்டமிடவில்லை; முழுக்க முழுக்க வேறு படம் கொடுக்க நினைத்ததாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மணிரத்னம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை என ராஜ்கமல் நிறுவனம் விளக்கியதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
ஓடிடியில் ரிலீஸ்: ஒரு க்ளாஸிக் கூட்டணி இரண்டாவது முறை இணையும்போது இந்த மாதிரியான சேதாரத்தை அக்கூட்டணி எதிர்பார்த்திருக்காது என்பதுதான் எதார்த்தம். இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டரில்தான் படத்துக்கு சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. என்வே ஓடிடியிலாவது ரசிகர்களை கொஞ்சம் கவருமா என்ற எதிர்பார்ப்பு படக்குழுவிடமும், ரசிகர்களிடமும் பலமாகவே எழுந்திருக்கிறது.
முன்னதாக இந்தக் கதையை கமல்ஹாசனே எழுதியிருந்தார். ஆனால் இந்தக் கதை நினைத்ததற்கு வேறு திசையில் இருந்தது. குறிப்பாக தந்தையும், வளர்ப்பு மகனும் ஒரு பெண்ணுக்கு அடித்துக்கொள்வதை பார்த்தபோது சாமி இயக்கிய சிந்து சமவெளி படம்தான் நியாபகத்துக்கு வந்தது என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் ஓபனாகவே பேசினார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











