Thug Life OTT: கமல்ஹாசனுக்கு ஒரே பெருமை.. தக் லைஃப் ஓடிடி ரிலீஸுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா?

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். மேலும் படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து பேசி, மிகவும் பெருமையாக உணர்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்திற்காக கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை டிரைலரை தமிழில் மட்டும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதேபோல் ஏற்கனவே படத்தில் இருந்து ஒரு பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதேபோல், இன்று அதாவது மே 21ஆம் தேதி படத்தில் இருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க த்ரிஷாவின் கதாபாத்திரத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா வருm 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Kamalhaasan Maniratnam STR Trisha Thug Life Movie OTT Release After 8 Weeks from june 5th

ஓடிடி ரிலீஸ்: இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளதால், அதற்கான புரோமோசன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

Take a Poll

பெருமையில் கமல்ஹாசன்: தமிழ் சினிமாக்கள் இதுவரை அனைத்துமே தியேட்டரில் வெளியாகி 4 நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வந்துள்ளது. அந்த வகையில் தக் லைஃப் படமும் நான்கு வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், 8 வாரங்களுக்குப் பின்னர், ஓடிடியில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமை எங்களுக்குத்தான் சேரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Kamalhaasan Maniratnam STR Trisha Thug Life Movie OTT Release After 8 Weeks from june 5th

ரியாக்‌ஷன்: இதற்கு முன்னர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தியேட்டரில் வெளியாகி 5 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரிந்து விட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் ஓடிடி ரிலீஸ்க்காக இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் திரைத்துறையில் பலரும் 8 வார கால இடைவெளி குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X