நீ யாரு என் மேல கைவைக்க.. பாருவிடம் எகிறிய கம்ருதீன்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த அடிதடி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் 12 வாரங்களாக காதல் புறாவாக பார்வதி, கம்ருதீன் இருவரும் சுற்றி வந்த நிலையில் கடந்த வாரம் குடும்பத்திலிருந்து கம்ரூத்தின் அக்கா வந்து, நீ தனியாக விளையாடு என சில அறிவுரைகளை கூறினார். அதே போல, பார்வதியின் அம்மாவாவும் அவருக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு சென்றார். இதையடுத்து, பார்வதி கம்ருதீனிடம் இருந்து விலகியே இருந்தார். இதையடுத்து இன்று இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் இருந்தே பார்வதி, கம்ருதீன் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த நாமினேஷனில் கம்ருதீன், பார்வதியை நாமினேட் செய்தார். நாமினேட் செய்ததற்கான காரணத்தை சொன்ன கம்ருதீன், பார்வதி என் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை திவாகரிடம் கூறியுள்ளார். நானும் ஒரு எம்எல்சி கம்பெனியில் வேலை செய்து இருக்கிறேன். எனக்கும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரியும், நானும் பார்வதியும் சிறையில் இருக்கும் போது நான் பார்வதியிடம் முத்தம் கேட்டேன். இதுதான் பார்வதி என் மீது சொல்லும் குற்றச்சாட்டாக இருக்கும் அதை நான் வெளிப்படையாகவே இந்த இடத்தில் ஒத்துக்கொள்கிறேன் என்றார். ஏற்கனவே இருவருக்கும் இடையே புகைந்து கொண்டு இருந்த நிலையில் அனைவர் மத்தியிலும், கம்ருதீன் சொன்னதை பார்வதியால் ஏற்றுக்கொள்ள முடியாததால் இருவருக்கும் இடையே மன கசப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் அடிதடி: இந்நிலையில், பிக் பாஸ் 9 வீட்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. முதல் டாஸ்க்கில் சுபிக்ஷா வெற்றிப் பெற்றார். இதையடுத்து நடந்த பந்து டாஸ்கின் போது கம்ருதீனுக்கும் பார்வதிக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கோல்டன் பந்தை கம்ருதீன் தன்னுடைய பாக்கெட்டில் எடுத்துவைத்துக்கொண்டான். அதை வாங்குவதற்காக பார்வதி கடுமையாக போராடி இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. ஆனால், எப்படியோ அந்த கோல்டன் பந்தை பார்வதி பெற்றுவிட்டார்.
கதறி அழுத பார்வதி: அதன் பின், பார்வதி கம்ருதீனை அடிக்க ஆத்திரத்தில் கத்திய கம்ருதீன், நீ யாருடி என் மேல கை வைக்க என்று என்கிறார். அப்போது பார்வதி, நீ மட்டும் என் மீது கை வைக்கவில்லையா... உன்னுடைய விளையாட்டு ரொம்ப சீப்பாக இருக்கிறது என்கிறிள். இதைக்கேட்டு கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கம்ருதீன் என் மேல கை வைக்க நீ யாரு டி, அதற்கு முதலில் நீ மன்னிப்பு கேள் என்கிறார். ஆனால், பார்வதியோ இவன் கிட்ட எல்லாம் என்னால் மன்னிப்பு கேட்கவே முடியாது என உறுதியாக இருக்கிறார். அதன்பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாத பார்வதி, கதறி அழுகிறாள்.


Click it and Unblock the Notifications











