kanaa kaanum kaalangal season 3: விரைவில் கனா காணும் காலங்கள் சீசன் 3.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியின் சீரியலாக ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கனா காணும் காலங்கள் அடுத்ததாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இரண்டாவது சீசனை வெப் தொடராக ஒளிபரப்பி மேலும் ரசிகர்களை சேர்த்தது. இளமை கால நினைவுகளை போற்றும் பொழுதுபோக்கு தொடரான கனா காணும் காலங்கள் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
இந்த தொடரின் இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில், தற்போது அடுத்த சீசன் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த சீசனில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனா காணும் காலங்கள் தொடர்: விஜய் டிவியில் பல மாதங்களைக் கடந்து ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள். முற்றிலும் பள்ளி மாணவர்களின் இளமை கால கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு வெளியான இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக மாறியது. இந்தத் தொடருக்கு காணப்பட்ட அதிகப்படியான வரவேற்பை தொடர்ந்து டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெப் தொடராக கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வெப் தொடராக கனா காணும் காலங்கள் இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த தொடர்: கனா காணும் காலங்கள் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த தொடரின் அடுத்த சீசனை டிஸ்னி + ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. விரைவில் இந்தத் தொடரின் 3வது சீசன் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டே இந்தத தொடரும் ஒளிபரப்பாகவுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை கவரும்வகையில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் அனைத்தும்: இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி 3வது சீசனும் உருவாகவுள்ளதாக வெப் தொடரின் டீம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த 3வது சீசன் குறித்து முன்னதாகவே ஏராளமான ரசிகர்கள் தங்களது எதிர்பாப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கால கொண்டாட்டங்கள்: பள்ளிக்காலம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பானதாக அமைந்து வருகிறது. எந்தவிதமான கஷ்டங்களையும் உணராமல் வானவில்லாய் வாழ்க்கையை வளைக்க முயற்சிக்கும் அந்தப் பருபவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே முதல் இரண்டு சீசன்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகவுள்ள அடுத்த சீசனும் கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்த ரசிகர்களை கவரும்வகையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இந்த 3வது சீசனை மிகவும் கவனமுடன் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











