பள்ளிக் காலங்களை இல்லத்திற்கு கொண்டுவரும் கனா காணும் காலங்கள்... ஏப்ரல் 22 முதல் ஒளிபரப்பு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருந்தது கனா காணும் காலங்கள். ஏராளமான ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்த தொடரின் அடுத்த சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த முறை இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது விஜய் டிவியில் இல்லை. மாறாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்.

Recommended Video

'இப்பவே சினிமால நடிக்கிறோம்' | Kanaa kaanum kaalangal 2 Crew Interview | Tamil Filmibeat

கனா காணும் காலங்கள் தொடர்

கனா காணும் காலங்கள் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்தது கனா காணும் காலங்கள். இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தது. பள்ளிக் காலங்களை அதன் குறும்புகளை பதிவு செய்த இந்தத் தொடர் தொடர்ந்து கல்லூரி கால இனிமைகளையும் ரசிகர்களுக்கு பரிசளித்தது.

அடுத்தடுத்த சீசன்கள்

அடுத்தடுத்த சீசன்கள்

கல்லூரியை மையமாக வைத்து இந்தத் தொடர் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பானது. இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தத் தொடரில் நடித்தவர்கள் பலரும் தற்போது சின்னத்திரையில் மட்டுமின்றி திரைத்துறையிலும் நடித்து வருகின்றனர்.

அடுத்த சீசன் ஆரம்பம்

அடுத்த சீசன் ஆரம்பம்

இந்த தொடரின் அடுத்த சீசனுக்காக தொடர்ந்து ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அட்லீஸ்ட் மறுஒளிபரப்பாவது செய்யக் கோரி வந்தனர். இந்நிலையில் 90 கிட்ஸ்சின் பேவரிட் சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் தொடரின் அடுத்த சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது.

15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடர்

15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடர்

ஏறக்குறைய 15 வருடங்கள் கழித்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் இந்த புதிய சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்தத் தொடர் விஜய் டிவியில் இல்லாமல் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

இந்த முறையும் பள்ளிக் காலத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதனிடையே இந்த சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரும் தொடர்ந்து பல பிரமோக்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X