OTT movies: கங்குவா.. ஜாலியோ ஜிம்கானா.. இந்தவார ஓடிடி வெளியீட்டு படங்களின் லிஸ்ட்!
சென்னை: 2025ம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கம் போல இந்த வாரமும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.,
அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற கங்குவா, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தஆண்டும் ஓடிடியில் அதிகமான படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வார ஓடிடி வெளியீடு: 2025ம் ஆண்டு சிறப்பான துவக்கத்தை கொடுத்துள்ளது/ இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஓடிடியில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்கள் ரிலீசாகவுள்ளன. ஓடிடியில் படங்களை பார்ப்பதற்கென்று தனியாக ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டில் அதன் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். அந்த வகையில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், யோகிபாபு, கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து திரையரங்குகளில் வெளியான ஜாலியோ ஜிம்கானா படம் கடத்ந 30ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கங்குவா படம்: மேலும் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசான கங்குவா படமும் கடந்த 31ம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓடிடியில் இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே நினா டோப்ரோவ், ஜெமி சுங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து திரில்லர் பாணியில் வெளியான ரீயூனியன் படம் நேற்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த நண்பர்கள் மீண்டும் இணைந்து கொலையாளியை துப்பறியும் கதைக்களத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

உப்பு புளி காரம் வெப்தொடர்: அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது தி பிளாக் ஸ்விண்ட்லர்.தனது குடும்பத்தை மோசடி செய்தவர்களை பழிவாங்கும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அடுத்ததாக பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள உப்பு புளி காரம் வெப் தொடரின் இறுதி எபிசோட் இன்றைய தினம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஹார்ட் பீட், கனா காணும் காலங்கள் தொடர்களை தொடர்ந்து இந்தத் தொடரும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

கேன்ஸ் விழாவில் விருது பெற்ற படம்: பாயல் கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட் இளம் ஹீரோ ஹிருது ஹாருன் நடிப்பில் உருவாகியுள்ள ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் நாளைய தினம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் கேன்ஸ் விருது விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றிருந்தது. இதனிடையே ஆர்கன் படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளைய தினம் வெளியாகவுள்ளது. இயக்குநர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், புராண கதையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











