திரையரங்குகளில் 50-வது நாள்… பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூல்… ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான காந்தாரா!
பெங்களூரு: கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா, திரையரங்குகளிலும் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இப்போது சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

காந்தாரா பாக்ஸ் ஆபிஸ்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம், செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேஜிஎஃப். படத்தை தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள 'காந்தாரா' படத்தின் மொத்த பட்ஜெட் 16 கோடி ரூபாய் தான் என சொல்லப்படுகிறது. ஆனால், காந்தாரா திரைப்படம். இதுவரை 400 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. ரொம்பவே குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் மேஜிக்
ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் இசையமைத்துள்ளார். காடுகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தானமாக கொடுத்த நிலங்களை அபகரிக்க நினைக்கிறார் பண்ணையார். இன்னொரு பக்கம் ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் திட்டத்துடன் அந்த மக்களை வேதனைப்படுத்துகிறது வனத்துறை. இறுதியில் என்ன ஆனது என்பதை பண்பாட்டுத் தரவுகளுடன் பல தொன்மையான கதைகளையும் கலைகளையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது காந்தாரா. முக்கியமாக படத்தின் கடைசி 20 நிமிடங்களில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு சிலிர்க்க வைத்துவிட்டது.

ஓடிடி ரிலீஸ் தேதி
செப்டம்பர் 30 பொன்னியின் செல்வனுடன் வெளியானா காந்தாரா, வசூலிலும் அந்தப் படத்துக்கு டஃப் கொடுத்துள்ளது. ஆனால், பொன்னியின் செல்வன் சென்ற வாரமே ஓடிடியில் வெளியாகவிட்ட நிலையில், காந்தாரா மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், திரையரங்குகளிலும் 50 நாட்களை கடந்துவிட்ட காந்தாரா, ஓடிடியிலும் வெளியாக உள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ள காந்தாரா. இதனால் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்க முடியாமல் போனவர்கள், ஓடிடியில் கண்டுகளிக்க ரெடியாக உள்ளனர்.

தொடர்ந்து சாதனை தான்
காந்தாரா ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானாலும் தியேட்டர்களில் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றே தெரிகிறது. கன்னடம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது காந்தாரா. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பால் உற்சாகத்தில் உள்ள ஹோம்பலே நிறுவனம், அடுத்த பாகம் தயாரிக்க விரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











