Scoop: வெப்சீரிஸில் முழு நிர்வாணமாக நடித்த பிரபல நடிகை.. தீயாக பரவும் கரிஷ்மா டானாவின் அந்த சீன்!

மும்பை: நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியான ஸ்கூப் வெப்சீரிஸ் தான் டாப் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. Scam 1992 வெப்சீரிஸை இயக்கி வேறலெவல் ஹிட் கொடுத்த இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கத்தில் தான் இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது.

ஸ்கூப் வெப்சீரிஸில் லீடு ரோலில் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா டானா நடித்துள்ளார். ஜக்ருதி பராக் எனும் சீனியர் கிரைம் ரிப்போர்ட்டராக இந்த வெப்சீரிஸில் படு போல்டான நடிப்பை கரிஷ்மா டானா வெளிப்படுத்தி உள்ளார்.

குற்ற வழக்கு ஒன்றில் ஒரு கட்டத்தில் கரிஷ்மா டானாவே சிக்கிக் கொள்வதும், அவர் மீதான வழக்கு எப்படி செல்கிறது என்கிற விதத்தில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸில் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாகவே கரிஷ்மா டானா நடித்துள்ள நிலையில், அந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஸ்கூப் வெப்சீரிஸ்: நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியாகி உள்ள பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத வெப்சீரிஸான ஸ்கூப் ஏகப்பட்ட இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தாவூத் இப்ரஹீம், சோட்டா ராஜன் என நிழல் உலக தாதாக்களின் குற்றங்கள் குறித்தும் அவர்கள் செய்த கொலை வழக்கில் பத்திரிகையாளர் ஒருவர் சிக்கிய வழக்கையும் கையில் எடுத்துக் கொண்டு இந்த வெப்சீரிஸை எந்தவொரு சமரசமும் இன்றி இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கி உள்ளார்.

முன்னதாக ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை ஸ்கேம் 1992 என்கிற டைட்டிலில் வெப்சீரிஸாக இயக்கி மிகப்பெரிய வெற்றியை இயக்குநர் ஹன்சல் மேத்தா பெற்றது குறிப்பிடத்தக்கது.

செம போல்டாக கரிஷ்மா டானா: ஜக்ருதி பதாக் எனும் கிரைம் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை படு போல்டான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் கரிஷ்மா டானா. கிரிமினல்கள் மற்றும் காவல்துறையினருடன் ரொம்பவே நெருக்கமாக சென்று பரபரப்பு செய்திகளை கொடுத்துக் கொண்டிருக்கும் கிரைம் ரிப்போர்ட்டர் ஒரு வழக்கில் குற்றவாளியாக சிக்கும் நிலையில், அவர் அந்த குற்றத்தை செய்தாரா? இல்லை அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டதா என்கிற விறுவிறு திரைக்கதையுடன் இந்த வெப்சீரிஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உள்ளது.

ஸ்டேஷனில் நிர்வாணமாக: இந்த வெப்தொடரில் சில படுக்கையறை காட்சிகளில் டாப்லெஸ் ஆக நடித்துள்ள பாலிவுட் நடிகை கரிஷ்மா டானா கைது செய்யப்பட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படும் போது பெண் காவலர் இவரது ஆடைகளை கழட்டச் சொல்லும் காட்சியில், முழு நிர்வாணமாக நடித்து ஷாக்கை கொடுத்துள்ளார்.

Karishma Tanna stuns everyone with her naked scene in Scoop web series

கதறி அழுது கொண்டே தனது ஆடைகளை கரிஷ்மா கழட்டும் போது, அவரது உள்ளாடைகளை பார்த்து இம்போர்ட்டட்டா என அந்த பெண் காவலர் கேட்கும் காட்சிகள் மற்றும் நீ கழட்டலனா நான் கழட்டுவேன் என சொல்லும் காட்சிகளும், ஆடையை கழட்டிய பின்னர் பின்னாடி திரும்பு, குனி என அவரது உடலை மோசமாக சோதனை போடும் காட்சிகளும் பார்வையாளர்களை பதை பதைப்பில் ஆழ்த்திவிடும்.

டாக் ஆஃப் தி டவுன்: விடுதலை படத்தில் எப்படி பெண்களை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் விசாரிப்பார்களோ அப்படி ஒரு உணர்ச்சியை அந்த காட்சி கொடுக்கும்.

பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கரிஷ்மா டானாவின் அந்த நிர்வாணக் காட்சியை பதிவிட்டு இதுதான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X