கார்த்தி படத்தோட ஓடிடி ரைட்சை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... துவக்கமே அதிரடியா இருக்கே!
சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்பை த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் மித்ரன்.
இந்தப் படம் திரையரங்குகளில்தான் ரிலீசாக உள்ளது. இதனிடையே படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். எந்த வேடத்தை ஏற்றாலும் அதை சிறப்பாக செய்து வருகிறார் கார்த்தி. இவருக்கு அனைத்து வேடங்களும் சிறப்பாக பொருந்துகிறது. கல்லூரி மாணவன், காதல் நாயகன், அதிரடி ஆக்ஷன் ஹீரோ, கிராமத்து சென்டிமெண்ட் நாயகன் என களை கட்டுகிறது இவரது படங்கள்.

அடுத்தடுத்த படங்கள்
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. தொடர்ந்து விருமன் படத்தின் சூட்டிங்கையும் முடித்துக் கொடுத்துள்ளார். இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஸ்பை த்ரில்லராக உருவாகும் சர்தார் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சர்தார் படத்தின் சூட்டிங்
விருமன், சர்தார் என அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் கார்த்தி. சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் ராசி கண்ணா. படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளது. இதனிடையே இதன் டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது.

சர்தார் படத்தின் ஓடிடி உரிமை
சர்தார் படம் திரையரங்குகளில்தான் ரிலீசாக உள்ளது. அதையடுத்து ஆஹா தமிழ் ஓடிடியில் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தியேட்டர் ரிலீசுக்கு பின்பான டிஜிட்டல் உரிமையை மட்டுமே ஆஹாவிற்கு தற்போது படக்குழு கொடுத்துள்ளது.

இரண்டு கெட்டப்புகளில் கார்த்தி
இந்தப் படத்தில் கார்த்தி இரண்டு கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதில் வயதான கேரக்டரும் ஒன்று. மேலும் படத்தில் சிம்ரன், ரஜிஷா விஜயன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் முரளி சர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

தடைப்பட்ட சூட்டிங்
படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான கார்த்தியை நமக்கு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஆஹா
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அர்விந்திற்கு சொந்தமான ஆஹா ஓடிடி தளம் இன்றைய தினம் தமிழிலும் தனது தளத்தை விரிவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த தளம் தற்போது கார்த்தியின் சர்தார் படத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே மாஸான படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











