twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா மிரட்டும் நவரசா பற்றி கார்த்திக் சுப்புராஜ்

    |

    சென்னை: "நவரசா" ஆந்தாலஜி படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறி வருகிறார் .

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விரைவில் வெளிவரவுள்ள "நவரசா" ஆந்தாலஜி படத்தில் அமைதி உணர்வை மையமாக வைத்து, ஒரு பகுதியை இயக்கியுள்ளார்.

    இப்பகுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளனர். தமிழின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

    துணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா!?.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டிதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா!?.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி

    கல்லூரி நாட்களில்

    கல்லூரி நாட்களில்

    கவுதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியது குறித்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது...இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் என் கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கு தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    எப்படி நடிக்க வேண்டும்

    எப்படி நடிக்க வேண்டும்

    ஒரு நடிகராக, இப்போது தான் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக என்னிடம் சொன்னார். அதனால் இப்படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம்.

    அழுத்தமாக இருந்தது

    அழுத்தமாக இருந்தது

    கடைசி நாளில், படப்பிடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது, ஏனென்றால் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டியிருந்தது, அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர் என்பதால் இந்த அழுத்தங்களை புரிந்துகொண்டு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். படத்தின் முதல் பிரதியை மிகவும் ரசித்தார். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.

    மிகச்சிறந்த நண்பர்கள்.

    மிகச்சிறந்த நண்பர்கள்.

    கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது..கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் படத்தில் மிகச்சிறந்த நண்பர்கள். திரையில் அவர்களது நட்பு மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. திரைக்கதை விவாதத்தின் போது, இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர்.

    உணர்வுகளை கொண்டு

    உணர்வுகளை கொண்டு

    படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல் நிறைய காட்சிகள் உள்ளன. இருவருக்குமிடையே படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமான உறவு ஏற்பட்டுவிட்டது. படத்திலும் அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.
    "நவரசா" மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம்.

    ஆகஸ்ட் 6

    ஆகஸ்ட் 6

    Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

    இணைய தொடர்கள்

    இணைய தொடர்கள்

    Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

     அதிக எதிர்பார்ப்பை

    அதிக எதிர்பார்ப்பை

    அப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு மிகப்பெரிய ஓ டி டி நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினம் தயாரிப்பில் நவரசா என்கின்ற இந்த படைப்பு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது .ஒரு பக்கம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் பாபி சிம்ஹா மிரட்டும் ஒரு படைப்பு- வித்தியாசமான திரைக்கதையுடன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது .

    ஒன்றன் பின் ஒன்றாக

    ஒன்றன் பின் ஒன்றாக

    இன்னொருபுறம் எட்டு வித்தியாசமான உணர்வுகளுடன் நவரசா - நம் வாழ்வியலோடு கலந்து வித்தியாசமான தமிழ் சினிமாவின் தொலைநோக்கு பார்வையுடன் சித்திக்கும் வெர்சடைல் இயக்குனர்கள் பல பதிவுகளை இயக்கியுள்ளனர். இந்த 9 படைப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் மட்டுமல்லாமல் மனதளவில் உணர்வுபூர்வமாக மிகவும் மென்மையான மற்றும் மனதில் பல கேள்விகளை எழுப்பும் கதைகளாக இந்த ஒன்பது பதிவுகளும் 9 சிப்பிகள் செய்த படைப்புகளாக ஒன்பது ரத்தினங்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது .

    நேர்த்தியாக தேர்ந்தெடுத்து

    நேர்த்தியாக தேர்ந்தெடுத்து

    ஒவ்வொரு படைப்பாளியும் தங்களது படைப்பை பல முறை சிந்தித்து வல்லுனர்களுடன் கலந்துரையாடி தங்களுக்கு உண்டான ஒரு பாணியை நேர்த்தியாக தேர்ந்தெடுத்து திரைக்கதை அமைத்து நவரசத்துடன் இந்த நவரசா என்னும் அந்தாலஜி கான்செப்ட் மூலம் பிரமிக்க வைக்கின்றனர்

    2 இயக்குனர்களுடன்

    2 இயக்குனர்களுடன்

    பாபி சிம்ஹா பல வித்தியாசமான படங்கள் நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படங்கள் நடிக்கும் பொழுது தனக்கு ஒரு மிகப்பெரிய மைலேஜ் கிடைக்கும் என்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தான் பேசும் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் நிறைய பேட்டிகளில் சொல்லி உள்ளார் . இந்த நவரசா என்னும் படைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என்கின்ற 2 ப்ரொபஷனல் இயக்குனர்களுடன் தானும் இருப்பது மிகப் பெருமையான விஷயமாக கருதுவதாகவும் தன் நெருங்கிய வட்டாரங்கள் இடம் சொல்லி வருகிறார் பாபி சிம்ஹா. மிகப்பெரிய ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்கின்ற ஒரு சூழ்நிலையில் தவழ்ந்து கொண்டிருக்கிறார் பாபி . இந்த நவரசா இவருக்கு ஒரு நல்ல பிரேக் கொடுக்கும் என்றும் நல்ல புதிய திரைக்கதை கொண்ட படவாய்ப்புகள் அமையும் என்றும் நம்புவோம்.

    English summary
    Director Karthick Subburaj has prasied actor Bobby Simha for his peformance in the anthology movie Navarasa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X