Meiyazhagan OTT: உறவுகளின் சென்டிமென்ட்.. மெய்யழகன் இன்று ஓடிடியில் வெளியானது!

சென்னை: கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் மெய்யழகன். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் இன்று ஓடிடியில் வெளியானது, தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் படத்தில் வன்னியத்தேவனாக தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பட தோல்வியை சந்தித்தது. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கார்த்தி இருந்த நிலையில், மெய்யழகன் படம் கடந்த மாதம் வெளியானது.

karthick meiyazhagan

மெய்யழகன்: 96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய 2வது படம்தான் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ண்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் படத்திற்காக கார்த்தி 15கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் வெளியானது இப்படம்.

ஓடிடி ரிலீஸ் தேதி: குடும்ப கதை, சென்டிமென்டுடன் கதைக்களத்துடன் வெளியான இப்படத்திற்கு அரவிந்த் சாமியுடன் முறைபெண், உன்னை கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும் என்று பேசியதை இணையவாசிகள் கொண்டாடினார்கள். இது மட்டுமில்லாமல், பல வசனம் மனதை கவரும் வகையில் இருந்ததால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கணிசமான வசூலை அள்ளியது. இப்படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள் இன்று ஓடிடி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள மெய்யழகன் படத்தை பார்க்கலாம். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

சர்தார் 2 : மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் 2-ம் பாகம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்தது போல, இதிலும் பாலிவுட் நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X