twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    41 வயதில் ஐபிஎல்லில் விளையாட தேர்வாக முடியுமா? பிரவின் தாம்பேவின் பயோபிக் பார்க்க ரெடியாகுங்க!

    |

    சென்னை: எம்.எஸ். தோனியின் அன்டோல்ட் ஸ்டோரி பயோபிக் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கபில் தேவின் பயோபிக் திரைப்படம் 83 வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

    மிதாலி ராஜின் பயோபிக்கில் டாப்ஸி நடித்து வருகிறார். விரைவில், அந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், 41 வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய பிரவின் தாம்பேவின் பயோபிக் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாக போகிறது. அதன் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

    தேவசேனாவாக மாறிய ஷெரின்... என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே!தேவசேனாவாக மாறிய ஷெரின்... என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே!

    ஓடிடி ரிலீஸ்

    ஓடிடி ரிலீஸ்

    ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும் 'கௌன் பிரவின் தாம்பே?' ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம் டிஸ்னி+ ஹாட் ஸ்டார், FOX STAR STUDIOS,FRIDAY FILMWORKS மற்றும் BOOTROOM SPORTS PRODUCTION நிறுவனங்களின் தயாரிப்பில், ஜெயப்பிரத் தேசாய் இயக்கத்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 1, 2022, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

    பிரவின் தாம்பே

    பிரவின் தாம்பே

    இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான 'கௌன் பிரவின் தாம்பே?' படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் தற்போது வெளியாகி உள்ள அட்டகாசமான டிரைலர் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என தூண்டுகிறது.

    41 வயதில் கிரிக்கெட்டர்

    41 வயதில் கிரிக்கெட்டர்

    கண்களில் கனவுகளுடன் விளையாட்டின் மீதான தனது காதலை நிரூபிக்க அவரது அயராத விடாமுயற்சியின் பயணம். 41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற்றும் அவரது வியத்தகு வரலாற்று சாதனை பற்றிய ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை தரும், இதயத்தை கவரும் திரைப்படம், கிரிக்கெட்டைப் போலவே வேடிக்கையானது, சவாலானது மற்றும் சிலிர்ப்பை தரக்கூடியது.

    வேறலெவல் நடிப்பு

    வேறலெவல் நடிப்பு

    பிரமாண்ட படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிரைலரின் ஒவ்வொரு காட்சியிலும், ஏமாற்றமும் கனவும் நிறைந்து வெற்றியை நோக்கிய பயணத்தை காட்டுகிறது. விளையாட்டுக்கு வயது ஒரு தடையல்ல என ஹீரோ சொல்லும் இடம் வேறலெவல்.

    ஹீரோ என்ன சொன்னார்

    ஹீரோ என்ன சொன்னார்

    பிரவின் தாம்பே கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே இந்த படம் பற்றி பேசுகையில், இக்பால் படத்தில் நாயகனாக நடித்து 17 வருடங்கள் கழித்து, திரையில் பிரவினாக நடித்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன். இந்தப் பாத்திரமும் கதையும் எனக்கு வாழ்நாளில் மிகச்சிறப்பானதொரு வாய்ப்பை வழங்கியது, படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசித்தேன், பிரவீன் கதாப்பாத்திரத்தை சரியாக செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் பெரும் முயற்சி தேவைப்பட்டது. இக்கதாப்பத்திரத்திற்காக அவருடன் இணைந்து பழகியது என்றென்றும் என் வாழ்வின் மிக அழகான தருணங்களாக இருக்கும், எங்கள் அனைவரின் உழைப்பில் இப்படம் அழகாக வந்துள்ளது என்றார்.

    English summary
    Popular Cricketer Pravin Tambe biopic Kaun Pravin Tambe trailer out now. It will release on Disney Plush Hotstar on April 1st this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X