ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலங்களின படங்கள்... எந்தெந்த படங்கள்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் பிரபலங்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் திரையரங்குகள் சரிவர திறக்கப்படவில்லை.
இதனால் முன்னணி ஹீரோக்கள் உட்பட பலரின் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆனது. ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன போதும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

மீண்டும் தியேட்டரில்
தியேட்டர் மெட்டீரியல் படங்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ளதால் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஓமணப்பெண்ணே படம்
அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள போதும் தியேட்டருக்கு மக்களின் கூட்டம் பழையபடி இல்லை. இதனால் பெரும்பாலான படங்கள் வந்த வரை லாபம் என ஓடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப்பெண்ணே படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸுக்கு பிறகு பிரபலம்
ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் ஹரீஷ் கல்யாண் மக்கள் மத்தியில் பரிட்சயமானார்.

ஓ மணப்பெண்ணே படம் ஓடிடியில்
பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளர். அவரது நடிப்பில் கடைசியாக கசடதபற படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

கவினின் லிப்ட் படம்
இதேபோல் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான கவினின் படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. வினீத் வரபிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படத்தில் நடித்துள்ளார் கவின். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்நிலையில் லிப்ட் படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











