Star OTT: சத்தமில்லாமல் ஓடிடியில் வெளியான கவினின் ‘ஸ்டார்’.. எந்த ஃபிளாட்பார்மில் தெரியுமா?

சென்னை: இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், காதல் சுகுமார் மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த கவின் நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் அந்த படம் அவருக்கு பெரிதாக போகவில்லை. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்து வெளியான லிப்ட் திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

OTT Kavin Star movie Amazon Prime

கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. டாடா படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பு: சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து வந்திருக்கும் ஹீரோ மெட்டீரியலான கவினின் ஸ்டார் திரைப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க முக்கிய காரணமே அந்தப் படத்தின் அட்டகாசமான டிரைலர் தான்.

பிளாக்பஸ்டர் ஆகல: ஆனால், ஸ்டார் படத்துக்கு முன்னதாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. டிரைலரில் காட்டப்பட்ட அளவுக்கு படம் சுவாரஸ்யமாக இல்லாத காரணத்தால் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடவில்லை. ஆனால் படத்தில் நடித்த கவினின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியான ஸ்டார்: அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று சத்தமில்லாமல் ஸ்டார் திரைப்படம் வெளியானது. காலை முதலே கவின் ரசிகர்கள் ஸ்டார் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்த்து வருகின்றனர்.

தாராளமாக பார்க்கலாம்: இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தை ஓடிடியில் ரசிகர்கள் தாராளமாக பார்க்கலாம். நிச்சயம் ரசிகர்களை அந்த படம் ஏமாற்றாது என்று கவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தெரிவித்து ஓடிடியில் அந்த படத்தை வெற்றிப் படமாக்க முயன்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X