Keerthy suresh: நேரடியாக ஓடிடி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் படம்.. எப்போது தெரியுமா?

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ். ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் வென்றார். கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, திருமணத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த, போலா சங்கர், சைரன், ரகு தாதா, பேபி ஜான் போன்ற எந்த படமும் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை. ரகு தாதா திரைப்படத்தில் இந்தி தெரியாது போடா என்று வசனம் பேசிய கீர்த்தி சுரேஷ். தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் சமந்தா ரோலில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. பாலிவுட் சென்றுவிட்டோம் என்ற தைரியத்தில் ஒவர் கவர்ச்சி காட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார்'

Keerthy suresh uppu kappurambu OTT
Photo Credit:

தெலுங்கு படம்: அதன் பின் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான கீர்த்தி சுரேஷ், 'உப்பு கப்புரம்பு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். சசி இயக்க உள்ள இந்த படத்தில், சுகாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வசந்த் மரியங்கண்டி கதை எழுதி உள்ள இந்த படம் 90 களில் நடக்கும் கதை அம்சத்தை கொண்டதாக உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக நிலையில், படக்குழு கடைசி நேரத்தில் இந்த படத்தினை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற ஜூலை 4-ம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேசுக்கு திருமணமாகிவிட்டதால், இனிமேல் அவரது படத்தை பார்க்க யாரும் வராமாட்டார்கள் என்பதற்காக படக்குழு இப்படி ஒரு முடிவை எடுத்ததா என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X